சிலுக்கு ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை இந்தியில் "டர்ட்டி பிக்சர்ஸ்' ஆகி செம ஹிட் அடித்தது. சிலுக்குவாக நடித்த வித்யா பாலன், இப்போது ஸ்ரீதேவி வாழ்க்கைக் கதையில் நடிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது.

Advertisment

vidyabalan

இதேபோல் நடிகையர்திலகம் சாவித்திரியின் வாழ்க்கை, தெலுங்கில் "மகாநதி' என்ற பெயரிலும் தமிழில் "நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் தயாராகிறது. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கின்றனர்.

heoriens

Advertisment

ஹீரோயின்களின் வாழ்க்கைக் கதைகள் வரிசையில் மம்முட்டி, மோகன்லால் போன்ற மெகா மலையாள ஸ்டார்களையே கலங்கடித்த கவர்ச்சி பாம் ஷகிலாவின் வாழ்க்கையும் படமாகிறது.

sridevi

richa

Advertisment

shakila

கர்நாடகாவில் சுட்டுக் கொல்லப் பட்ட முற்போக்கு எழுத்தாளர் கௌரி லங்கேஷின் சகோதரர் இந்திரஜித் லங்கேஷ்தான் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர். ஷகிலாவிடம் முறைப்படி அக்ரி மென்ட் போட்டு, 15 லட்சம் பேமென்டும் கொடுக்கப்பட்டுவிட்டதாம். ஷகிலாவாக நடிக்க முதலிலில் அஞ்சலியிடம் பேசியிருக்கிறார்கள். ""ஆரம்பகால ஷகிலா ஒல்லியாத்தான் இருப்பாங்க, ஓ.கே. ஆனா போகப்போக பெருத்த உடம்பாகி, இப்ப இருக்கிற சைசுக்கு நம்மளால ஒடம்பைக் கூட்ட முடியாது'' என மறுத்துவிட்டாராம் அஞ்சலி. எனவே தெலுங்கு- இந்தி முகமான ரிச்சா தத்தாவை ஓ.கே.பண்ணிவிட்டாராம் இந்திரஜித் லங்கேஷ்.