Advertisment

ஹீரோயின்களும் ஃபாரீன் ஹஸ்பெண்டுகளும்! -"எப்படித்தான் சிக்குறாய்ங்களோ...''

/idhalgal/cinikkuttu/heroines-and-foreign-husband

ந்த மொழி சினிமா ஹீரோயினா இருந்தாலும், இப்பல்லாம் ஃபாரின் பார்ட்டிகளை ஹஸ்பெண்டுகளாகப் பிடிப்பதில் படுமும்முரமாக இருக்கிறார்கள். ஏதோ நம்மால் முடிந்த, நாட்டுக்கு பயனுள்ள சங்கதிகளை இங்கே பகிர்ந்திருக்கோம். அதிலும் தன்னைவிட பத்து வயசு கம்மியான பையனை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிரியங்கா சோப்ராவின் சிரிப்பு இருக்கே சிரிப்பு, பார்க்கப் பார்க்க அம்புட்டுப் பரவசம் போங்க...

Advertisment

சரி மேட்டரைப் படிங்க...

இலியானா டி க்ரூஸ் - ஆஸ்திரே

ந்த மொழி சினிமா ஹீரோயினா இருந்தாலும், இப்பல்லாம் ஃபாரின் பார்ட்டிகளை ஹஸ்பெண்டுகளாகப் பிடிப்பதில் படுமும்முரமாக இருக்கிறார்கள். ஏதோ நம்மால் முடிந்த, நாட்டுக்கு பயனுள்ள சங்கதிகளை இங்கே பகிர்ந்திருக்கோம். அதிலும் தன்னைவிட பத்து வயசு கம்மியான பையனை கல்யாணம் பண்ணிக்கிட்ட பிரியங்கா சோப்ராவின் சிரிப்பு இருக்கே சிரிப்பு, பார்க்கப் பார்க்க அம்புட்டுப் பரவசம் போங்க...

Advertisment

சரி மேட்டரைப் படிங்க...

இலியானா டி க்ரூஸ் - ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீமோன் இவரது ரகசிய காதலன் என்ற செய்திகள் பரவின. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானாவும் இதனை உறுதிப்படுத்தினார். தீராத மனஅழுத்தத்தில் இருந்த தன்னை, அதிலிருந்து மீட்டெடுத்தவர் ஆன்ட்ரூ என்றும், நிறம் - தேசியம் என எல்லாவற்றையும் கடந்தது தனது காதல் என்றும் கியூட்டாக தன் காதலன் பற்றிய கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் இலியானா ராதிகா ஆப்தே-

Advertisment

radhikaopth

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம்வரும் ராதிகா, தனது காதலரான இங்கிலாந்தைச் சேர்ந்த பெனிடிக்ட் டெய்லரைத் திருமணம் செய்திருக்கிறார்.

ராதிகாவுக்கு கொஞ்சமும் சளைக்காத உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர்தான் இந்த பெனிடிக்ட். ராதிகா மும்பையிலும், பெனிடிக்ட் இங்கிலாந்திலும் வேலை நெருக்கடியால் பிரிந்து வாழ்கின்றனர். வாழ்க்கைன்னா சில பிரிவுகளை ஏத்துக்கிட்டுதான் ஆகணும் என சிணுங்குகிறார் ராதிகா.

ப்ரியங்கா சோப்ரா-

foreignfriends

கோலிவுட்டில் அறிமுகமாகி, பாலிவுட்டைக் கலக்கி, "பேவாச்' படத்தின்மூலம் ஹாலிவுட்டிலும் கால்பதித்தவர் ப்ரியங்கா சோப்ரா. குவாண்டிகோ தொடரின் மூலம் உலக சினிமாவின் கவனத்தைப் பெற்ற ப்ரியங்கா, அமெரிக்க பாடகரும், பாடலாசிரியருமான நிக் ஜோனாஸ் என்பவரை சமீபத்தில் மணமுடித்தார். நிக் ஜோனாஸ் ப்ரியங்கா சோப்ராவைவிட பத்து வயது இளையவராம். காதலுக்கு வயசு முக்கியமில்ல பாஸ். இவர்களது திருமண வரவேற்பில் பிரதமர் மோடியே கலந்துக்கிட்டாருன்னா பார்த்துக்கங்களேன்.

ஸ்ரேயா சரண்-

shreya

ஒல்லி பெல்லி ஸ்ரேயா சமீபத்தில் ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ட்ரூ கோஸ்சீவ்வை திருமணம் செய்துகொண்டார். டென்னிஸ் வீரர் மற்றும் தொழில்முனைவோரான ஆன்ட்ரூ, சிறந்த பேச்சாளரும் ரஷ்யாவின் மிகச்சிறந்த பிரபலமும் ஆவார். ஸ்ரேயாவுக்கும் ஆன்ட்ரூவுக்கும் இடையே காதல் வெள்ளம் பெருக, இருவரும் ரகசியமாக லவ்வி வந்தனர். இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் நடந்தாலும் பெரிய அளவில் திருமண விழா ஏற்பாடுகள் செய்யவில்லை.

(மற்ற ஹஸ்பெண்டு களின் டீடெய்ல் வரும் இதழில்...)

-மதி & ஈ.பா.

cine181218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe