Advertisment

ஹீரோயின்களும் ஃபாரீன் ஹஸ்பெண்டுகளும்!

/idhalgal/cinikkuttu/heroines-and-foreign-husband-0

சென்ற இதழ் தொடர்ச்சி

நீனா குப்தா- பாலிவுட்டில் பல ஆண்டுக்கு முன்பு நடித்த மூத்த நடிகை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சர் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் திருமணம் செய்துகொள்ளாமல் பழகி வந்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனரான மசாபா குப்தா. ஆனால், இவர்களது உறவு நீடிக்கவில்லை. விவியன் வேறொரு பெண்ணையும், நீனா குப்தா வேறொரு ஆணையும் திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர்.

Advertisment

tapsi

டாப்ஸி- பாலிவுட்டைக் கலக்கிக்கொண்டிருக்கும் டாப்ஸி இப்போதுவரை தனது ரிலேசன்ஷிப் பற்றி வாய் திறக்க வில்லை. ஆனால், அவருக்கு

சென்ற இதழ் தொடர்ச்சி

நீனா குப்தா- பாலிவுட்டில் பல ஆண்டுக்கு முன்பு நடித்த மூத்த நடிகை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற சர் விவியன் ரிச்சர்ட்ஸ் உடன் திருமணம் செய்துகொள்ளாமல் பழகி வந்தார். இவர்கள் இருவருக்கும் பிறந்தவர் தான் புகழ்பெற்ற ஃபேஷன் டிசைனரான மசாபா குப்தா. ஆனால், இவர்களது உறவு நீடிக்கவில்லை. விவியன் வேறொரு பெண்ணையும், நீனா குப்தா வேறொரு ஆணையும் திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றனர்.

Advertisment

tapsi

டாப்ஸி- பாலிவுட்டைக் கலக்கிக்கொண்டிருக்கும் டாப்ஸி இப்போதுவரை தனது ரிலேசன்ஷிப் பற்றி வாய் திறக்க வில்லை. ஆனால், அவருக்கும் டென்மார்க்கைச் சேர்ந்த பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போவுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக செய்திகள் வெளியாகின. டாப்ஸியும் ஒருமுறை மதியாஸ் உடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். செய்தி யாளர்கள் இதுபற்றி சுரண்டிக் கொண்டே இருக்க, ""ஆமாங்க நான் ஒரு வெளிநாட்டுக்காரர லவ் பண்றேன்'' என்று சொல்லியிருந்தாலும், தப்பித்தவறிகூட மதியாஸின் பெயரை டாப்ஸி சொல்லவே இல்லை.

Advertisment

preethiஸ்ருதிஹாசன்- லண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கோர்சலேவுடன் ரொம்ப நாளாக டேட்டிங்கில் இருக்கிறார் ஸ்ருதி. அவர்கள் இருவருக்கும் இடையிலான காதலைப்பற்றி ஸ்ருதி ஒருமுறைகூட பேசவில்லை என்றாலும், இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்களை தவறா மல் சோஷியல் நெட் வொர்க்குகளில் ஷேர் செய்கிறார். ஒரு முறை கமல்ஹாசன் நடித்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ஸ்ருதியுடன் பப்ளிக் கான்ஃபரன்ஸ் காலில் பேச, ""அந்த தாடி வச்ச பையனைப் பத்தி சொன்னேனில்லப்பா.'' என்று சொல்ல, கமல் செல்லமாக கட் செய்தாரே நினை விருக்கிறதா? அந்த தாடி பாய்தான் இந்த மைக்கேல் கோர்சலே.

அனுஹாசன்- நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் மகளான அனுஹாசன் சமீபத்தில் லண்டனைச் சேர்ந்த கிரஹாம் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கிரஹாம் லண்டனில் வங்கி அதிகாரியாக இருக்கிறார். இசை சம்பந்தப்பட்ட வெப்சைட் ஒன்றின் வழியாக அறிமுகமான இருவரும் காதலாகி, நீண்டகால காதலைத் திருமணமாக்கிக் கொண்டனர். தனது முறிந்துபோன முதல் திருமண வாழ்க்கைக்குப் பிறகு, புதிய வாழ்க்கையைத் தொடங்கியிருக்கும் அனுஹாசன், கிரஹாமுடன் லண்டனிலேயே தங்கினாலும் அடிக்கடி சென்னை வந்து சேனல்களில் டாக்-ஷோ பண்ணும் ஐடியாவில் இருக்கிறாராம்.

ப்ரீத்தி ஜிந்தா- பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா பிரபல மாடல் மார்க் ராபின்சனுடன் டேட்டிங்கில் இருந்தபோது, பல கிசுகிசுக்கள் வெளியானதுண்டு. ஆனால், சில நாட்களில் அந்த உறவு முறிந்துபோக, ""அந்த அழகான நினைவுகள் எனக்குள்ளேயே பத்திரமாக இருக்கட்டும்'' என கியூட்டாக பிரேக் அப் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனீ குட் எனஃப் என்பவருடன் அவருக்கு காதல் மலர்ந்தது. பல ஆண்டுகளாக நீடித்த அந்தக் காதலை 2016-ஆம் ஆண்டு திருமணமாக்கி, நீட்டித்துக்கொண்டனர் இருவரும்.

sruthi

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனீ பொருளாதார வல்லுநர் ஆவார். இவர்களது திருமண ஆல்பத்தை ஏலம்விட்டு, அதில்வரும் பணத்தை ஆதரவற்றோர் நலனுக்காக செலவிடப் போவதாகக் கூறி, அதைச் செய்தும் காட்டினார்.

அப்பெல்லாம் நடிகைகளிடம் தொழிலதிபர்கள் சிக்கு வார்கள். சமீபகாலமாக சாஃப்ட்வேர் இன்ஜினி யர்கள் சிக்கினார்கள்... இப்ப டைரக்டா ஃபாரீன் பார்ட்டிகள்தான்.

-மதி & ஈ.பா.

cine251218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe