"வந்தா மலை' படம்மூலம் தமிழில் அறிமுகமானவர் ஸ்ரீபிரியங்கா. பாண்டிச் சேரியைச் சேர்ந்த தமிழ்பேசத் தெரிந்த தமிழச்சியான பிரியங்கா அடுத்தடுத்து சின்னப் படங்களில் சின்ன ஹீரோக்களுடன் கமிட் ஆனார்.

Advertisment

தனது படங்களின் ஆடியோ ரிலீஸ் விழாக்களில் பேசும்போது, ""தமிழச்சியான எனக்கு நல்ல சான்ஸ் கிடைக்கவே மாட்டேங்குது. பெரிய ஹீரோக்கள் எல்லாரும் வேற ஸ்டேட்ல இருந்துவரும் ஹீரோயின்களுக்குத்தான் சான்ஸ் கொடுக்கிறார்கள்'' என குமுறிக் கொந்தளிப்பார்.

sreepriyanka

இப்படிப் பேசிப் பேசியே விக்ரமின் "ஸ்கெட்ச்' பட வாய்ப்பைப் பிடித்தார். அந்தப் படத்தின் டைரக்டர் விஜய் சந்தருடன் நெருக்கம் காட்டியதால் ஹீரோயின் தமன்னாவுக்கு இணையான கேரக்டர் கிடைத்தது. படம் முழுக்க வருவார் பிரியங்கா. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எடுத்த "கங்காரு'-வில் பிரியங்காதான் ஹீரோயின். அடுத்ததாக சுரேஷ் காமாட்சி டைரக்டராவும் புரமோஷன் ஆகி, சத்யராஜ்- மணிவண்ணன் காம்பினேஷனில் "நாகராஜ சோழன்'படத்தை எடுத்து பெருத்த நட்டத்துக்குள்ளானார்.

Advertisment

gangaiamaran

ஆனாலும் அசராத சுரேஷ் காமாட்சி, பிரியங்கா போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கும் "மிக மிக அவசரம்' படத்தை எடுத்து முடித்தார். பெண் போலீசார் சந்திக்கும் பாலிலியல் நெருக்கடிகள் பற்றிய படம் என்பதால், "மிக மிக அவசர'த்துக்கு அதிகமானமிரட்டல் வருவதாக சுரேஷ் காமாட்சி தரப்பே கிளப்பிவிட்டும் படம் போணியாகவில்லை. சிலபல நிதிநெருக்கடிகளுக்காக பிரியங்காவை தனது பிடிக்குள்ளேயே வைத்திருக்கிறாராம் சுரேஷ் காமாட்சி.

ஏகப்பட்ட கடன் நொம்பலத்தில் இருந்தாலும், இப்போது வெங்கட் பிரபு- சிம்பு காம்பினேஷனில் "மாநாடு' படம் எடுக்கப் போவதாக அறிவித்துள்ள சுரேஷ் காமாட்சி, சிம்புவுக்கு ஜோடியாகவோ அல்லது செகன்ட் ஹீரோயின் கேரக்டரோ தருகிறேன் என வாக்குறுதி கொடுத்து பிரியங்காமீது வைத்துள்ள பிடியை மேலும் இறுக்கியிருக்கிறாராம்.

Advertisment

ஆனால் சிம்பு ஓ.கே.சொல்லணுமே என தவியாய் தவிக்கும் பிரியங்கா எப்படா இந்தப் பிடியிலிலிருந்து விடுபடுவோம் என்ற அவஸ்தையில் இருக்கிறார்.

-பரமு