Advertisment

ராதிகா ஆப்தேவை "நோண்டிய' ஹீரோ!

/idhalgal/cinikkuttu/heroine-radhika-apte

ரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், ஏன் முழு நிர்வாணமாகக்கூட நடிக்கத் தயங்காதவர் இந்திப் பட பிரபலமான ராதிகா ஆப்தே. தியேட்டர் ஆர்டிஸ்டான இவர் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக் கட்டுபவர். தனது வெளிநாட்டுக் காதலருடன் டேட்டிங் போய், குளுகுளு கிளுகிளு போஸ்களை வாரி வழங்கி, உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பண்ணி, ரசிக மகாஜனங்களை எப்போதுமே வெப்பமாக வைத்திருப்பவர். இன்னும் ச

ரை நிர்வாணம், முக்கால் நிர்வாணம், ஏன் முழு நிர்வாணமாகக்கூட நடிக்கத் தயங்காதவர் இந்திப் பட பிரபலமான ராதிகா ஆப்தே. தியேட்டர் ஆர்டிஸ்டான இவர் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக் கட்டுபவர். தனது வெளிநாட்டுக் காதலருடன் டேட்டிங் போய், குளுகுளு கிளுகிளு போஸ்களை வாரி வழங்கி, உடனுக்குடன் இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பண்ணி, ரசிக மகாஜனங்களை எப்போதுமே வெப்பமாக வைத்திருப்பவர். இன்னும் சொல்லப்போனால் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் "கபாலி'-யில் நடித்ததன்மூலம், தென்னிந்திய சினிமாவில் ரொம்பவே பிரபலமானவர்.

Advertisment

radhikapte

அப்படியாப்பட்ட பேரும் புகழும் கொண்ட ராதிகா ஆப்தே தான், இப்ப பொங்கி வெடித்து பொறுமித் தீர்த்திருக்கிறார். இந்தி ஃபேமஸ் ஹீரோயினான நேகா துபியா நடத்திய டி.வி.டாக்ஷோ ஒன்றில் கலந்துகொண்டார் ராதிகா ஆப்தே. தனது பள்ளிப்பருவம், இளம் வயது, ஃபாரின் லவ்வர், சினிமா என்ட்ரி என துபியாவின் அனைத்துக் கேள்விகளுக்கும் ஆஃப்தி ரெக்கார்டாக பதில் சொல்லாமல், ஓப்பனாகவே சொன்னார்.

radhikapte

Advertisment

சினிமாவில் ஹீரோக்களின் சில்மிஷங்கள் குறித்து கேள்வி வந்ததும், சீறித்தள்ளிவிட்டார் ராதிகா ஆப்தே. ""தென்னிந்திய சினிமாவில் எனக்கு முதல் படம் அது. டைரக்டர் சொன்ன கதை பிடித்ததால், ஹீரோ யாருன்னுகூட கேட்காம ஓ.கே. சொன்னேன். என்னுடன் நடிக்கும் ஹீரோ பத்தி, அவ்வளவா எனக்குத் தெரியாது. ஷூட்டிங் ஆரம்பிச்சு பத்து நாள் கழிச்சுத்தான், அந்தக் காலத்து கண்ணியமான ஹீரோவின் மகன்னு தெரிஞ்சது.

radhikapte

ஒரு பதினைஞ்சு நாள் ஷூட்டிங் போனதும் ஜாடைமாடையா கொக்கி போட்டாரு ஹீரோ, நான் கண்டுக்கவேயில்லை. அஞ்சு நாள் ஷெட்யூல் போட்டு ஊட்டியில சாங் ஷூட்டிங்கிற்காகப் போனோம். டீ பிரேக்ல என்னுடன் பேசிக்கிட்டிருந்தாரு ஹீரோ. அப்ப டேபிளுக்கு அடியில அவரோட காலை நீட்டி, என்னோட புடவையை முழங்கால் வரைக்கும் தூக்கி தடவ ஆரம்பிச்சாரு. நான் புடவையை இறக்கிவிட்டா மீண்டும் நோண்ட ஆரம்பிச்சாரு. வந்ததே எனக்கு ஆத்திரம், எந்திரிச்சு ஹீரோ கன்னத்துல பளார்னு ஒரு அறைவிட்டதும்தான் அடங்குனாரு'' என பொளந்து கட்டிவிட்டார் ராதிகா ஆப்தே.

அந்த ஹீரோ யாருன்னு கேட்டா பிரதர்ஸ்ல ஒருத்தர்னு கோடம்பாக்கத்துல சொல்லிக்கிறாங்க, நாம என்னத்தக் கண்டோம்.

-ஈ.பா. பரமேஷ்வரன்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe