"ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு. ராஜா தயாரித்துள்ள படம் "பாப்பிலோன்.' படத்தைத் தயாரித்துள்ளதுடன் கதாநாயக னாக நடித்து படத்தை இயக்கி யும் இருக்கிறார் ஆறு. ராஜா. "பாப்பி லோன்' என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்த மாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cin.jpg)
கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல், தங்கையாக சௌமியா மற்றும் அம்மா வாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித் துள்ளனர். பண்ணை யார் கதாபாத்திரத் தில் "பூ' ராமு மற்றும் அவரது மகளாக அபி நயா நடிக்க, "மாரி' புகழ் வினோத் காமெடியனாக வருகிறார்.
ஷ்யாம் மோகன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் வெளியான "காவியன்' படத்திற்கு இசையமைத் தவர். அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய "ஒத்த செருப்பு' எடிட்டர் சுதர்சன் இப்படத்தின் படத் தொகுப்பைக் கவனித்துள்ளார்.
வத்தலகுண்டு, தாண்டிக்குடி, கொடைக்கானல் ஆகிய பகுதி களில் இதன் படப்பிடிப்பு நடை பெற்று முடிந்து, இந்தப் படத்திற்கு முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் வேறு ஒரு கதாநாயகி. கொடைக்கானல் பகுதியில் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாவது நாளிலேயே, தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக் காரணம் காட்டி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்றாராம்.
பின்னர்தான் அவர் தனது காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார் என தெரிய வந்துள்ளது. உடனடியாக ஸ்வேதா ஜோயல் என்கிற இன்னொரு கதா நாயகியை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-11/cin-t.jpg)