Advertisment

ஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணம்! 2

/idhalgal/cinikkuttu/heroes-tell-story-2

நொம்பலத்தில் விமல்!

hhhh

Advertisment

"பியார் பிரேமா காதல்' படம்மூலம் தெரிந்த முகமானவர் ஹரீஸ். "பிக்பாஸ்' ரைசா வில்சன்தான் இவருக்கு ஜோடி. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தான் படத்தின் தயாரிப்பாளர். படத்தில் ஹரீஸை விட ரைசாதான் ஏகப்பட்ட சீன் களில் நடிப்பில் வெளுத்துக் கட்டியிருப்பார். சின்ன பட்ஜெட் டில் தயாராகி ரிலீசான "பியார் பிரேமா காதல்' படம் செம ஹிட்டானது.

இந்த ஹிட்டுதான் ஹரீஸின் மண்டைக் குள் ஏறியது. பல இணை இயக் குநர்கள் முட்டி மோதி அலைந்து திரிந்து, தயாரிப்பாளரைப் பிடித்துக் கொண்டு ஹரீஸிடம் கதை சொல்லப்போனால் சுமார் இரண்டு மணி நேரமாவது அவர்களைக் காக்க வைத்து, அதன்பின்தான் கதை கேட்பா ராம். கையில் எந்தப் படமும் இல்லை

நொம்பலத்தில் விமல்!

hhhh

Advertisment

"பியார் பிரேமா காதல்' படம்மூலம் தெரிந்த முகமானவர் ஹரீஸ். "பிக்பாஸ்' ரைசா வில்சன்தான் இவருக்கு ஜோடி. இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தான் படத்தின் தயாரிப்பாளர். படத்தில் ஹரீஸை விட ரைசாதான் ஏகப்பட்ட சீன் களில் நடிப்பில் வெளுத்துக் கட்டியிருப்பார். சின்ன பட்ஜெட் டில் தயாராகி ரிலீசான "பியார் பிரேமா காதல்' படம் செம ஹிட்டானது.

இந்த ஹிட்டுதான் ஹரீஸின் மண்டைக் குள் ஏறியது. பல இணை இயக் குநர்கள் முட்டி மோதி அலைந்து திரிந்து, தயாரிப்பாளரைப் பிடித்துக் கொண்டு ஹரீஸிடம் கதை சொல்லப்போனால் சுமார் இரண்டு மணி நேரமாவது அவர்களைக் காக்க வைத்து, அதன்பின்தான் கதை கேட்பா ராம். கையில் எந்தப் படமும் இல்லை யென்றாலும், 2021 வரை டேட் இல்லையே' என வெட்டி பந்தா பண்ணி தயாரிப்பாளரை தெறிக்கவிடுவதுதான் ஹரீஸின் கோக்குமாக்கு ஸ்டைல்.

பல முன்னணி தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் ஹரீஸுக்கு போன் மற்றும் மெசேஜ் பண்ணியே கடுப்பாகி விட்டார்களாம். எந்த போனுக்கும், மெசேஜுக்கும் பதிலே சொல்லாத நல்ல பழக்கமுள்ளவராம்.

Advertisment

""வாய்ப்பே இல்லாத நேரத்துல கருணாஸுடன் ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு நடிச்சதையெல்லாம் தம்பி மறந்துட்டாருபோல'' என ஹரீஸ் பற்றி கமெண்ட் அடிக்கிறார்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில்.

அடுத்து விமல் கதைக்கு வருவோம்...

vvv

"மன்னர் வகையறா' என்ற சொந்தப் படத்தை எடுத்து ஏகப்பட்ட கடனுக்குச் சொந்தக்காரராகி நொம்பலத்தில் இருப்பவர் விமல். இவருக்கு ஸ்டெடியான மார்க்கெட் இல்லாததால் கதை கேட்பதில் எந்த பந்தாவும் பண்ணமாட்டாராம். கதை சொல்ல நேரம் கேட்டவுடனேயே, ""வாங்க பாஸ், தாராளமா கதை கேட்போம்'' என சொன்னதும் டைரக்டர்கள் ஹேப்பியோ ஹேப்பியாகி விடுவார்களாம்.

""கதை ஏதோ சுமாரா இருந்தாபோதும் பாஸ். நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். ஒரு ரூபா (சினிமா பாஷையில ஒரு ரூபான்னா ஒரு கோடி) கொடுத்தீங்கன்னா அக்ரிமெண்ட்ல கையெழுத்துப் போட்ருவேன்'' என்பராம். ""ஒரு ரூபாயா?'' என தயாரிப்பாளர் மருகினால், ""எழுபத்தஞ்சுல முடிச்சிக்குவோம். ஆகவேண்டிய மத்த வேலைகளைப் பாருங்க'' என கூல்டிரிங்ஸ் கொடுத்து கூலாக அனுப்பிவிடுவாராம்.

இருக்கும் கடனை அடைப்பதற்காக நீட்டுகிற பத்திரத்திலெல்லாம் கையெழுத்துப் போடும் கண்டிஷனில் இருக்காராம் விமல். இரண்டு மாதங்களுக்குமுன்பு ரிலீசாகிய "களவாணி-2'கூட விமலிலின் பணப் பஞ்சாயத்தால் பல சிக்கல்களைச் சந்தித்துத்தான் ரிலீசாகியது. படமும் நல்லா கலெக்ஷன் பார்த்ததால், தயாரித்து டைரக்ட் பண்ணிய சற்குணம் தெம்பானார்.

இப்போது விமலுடன் வரலட்சுமி ஜோடி போட்டி ருக்கும் படம் "கன்னிராசி.' இந்தப் படமாவது தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கார் விமல்.dda

அடுத்து வருகிறார்

அதர்வா...

இவர் நடித்து ரிலீசான படங்களில் "ஈட்டி' ஒன்றுதான் சுமார் ரகம். மற்றதெல்லாம் "ஏய் நல்லா பார்த்துக்க! நானும் சினிமாவுல இருக்கேன், நானும் ஹீரோதான்' என்ற ரகத்தைச் சேர்ந்தவை. அதர்வாவை வைத்து "பூமராங்' படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய கண்ணன் கண்ணீர் விடாத குறைதான். அதற்குப்பின் அதர்வா எந்தப் படத்தில் நடிக்கி றார்னு அவருக்கே தெரியாது. ஆனாலும் கெத்தைவிடாமல், "கதை கிடக்கட்டும் பாஸ் இரண்டு கோடியே 70 லட்ச ரூபாய் சம்பளம் ஓ.கே.ன்னா புரொடியூசருடன் வாங்க'' என்பராம். அது என்ன கணக்கு 2.70-ன்னு கேட்டா... 30 லட்ச ரூபாய் ஜி.எஸ்.டி.ல போயிரும் என நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரேஞ்சுக்கு பதில் சொல்வாராம்.

""இவரோட அப்பா முரளி புதுப்புது டைரக்டர்களிடம் படம் பண்ணி பெரிய ஹீரோவா ஆனாரு. ஆனா இவரோ...?'' என உதட்டைப் பிதுக்குகிறார்கள் புதுமுக இயக்குநர்கள்.

ஈ.பா. பரமேஷ்வரன்

(வரும் இதழில் இடம் பெறுபவர்கள் சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி)

cini240919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe