Advertisment

ஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணக் கதைகள்!

/idhalgal/cinikkuttu/heroes-tell-stories

ப்போதெல்லாம் தமிழ் சினிமா எடுப்பதற்குள் பேப்பாடு, பெரும்பாடுபடுகிறார்கள் பணம் போடும் முதலாளிகளான தயாரிப்பாளர்கள். அதையும் மீறி படத்தை எடுத்து விட்டு, அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் அவர்களுக்கு தாவு தீர்ந்து விடுகிறது. சரியான திட்டமிடலும் நல்ல டெக்னீஷியன்களும் இருந் தால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படத்தை எடுத்து, நல்ல முறையில் வியாபாரமும் செய்து போட்ட பணத்தைவிட கொஞ்சமாக லாபம் கிடைத்தா லும் தயாரிப்பாளர்கள் திருப்தியாகி விடுகிறார்கள்.

Advertisment

vvas

ஆனால் சில முன்னணி ஹீரோக்களிடம் கதை

ப்போதெல்லாம் தமிழ் சினிமா எடுப்பதற்குள் பேப்பாடு, பெரும்பாடுபடுகிறார்கள் பணம் போடும் முதலாளிகளான தயாரிப்பாளர்கள். அதையும் மீறி படத்தை எடுத்து விட்டு, அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் அவர்களுக்கு தாவு தீர்ந்து விடுகிறது. சரியான திட்டமிடலும் நல்ல டெக்னீஷியன்களும் இருந் தால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படத்தை எடுத்து, நல்ல முறையில் வியாபாரமும் செய்து போட்ட பணத்தைவிட கொஞ்சமாக லாபம் கிடைத்தா லும் தயாரிப்பாளர்கள் திருப்தியாகி விடுகிறார்கள்.

Advertisment

vvas

ஆனால் சில முன்னணி ஹீரோக்களிடம் கதை சொல்வதற்கு திறமைவாய்ந்த இணை இயக் குநர்கள் படும்பாடு ரொம்பவே சோகக் கதைகள் நிறைந்த பக்கங்கள். பெரிய ஹீரோக்களை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் களிடம் கதை சொல்லப்போனால், ""என்கிட்ட சொல்லிலி பிரயோஜனம் இல்ல தம்பி. மொதல்ல அந்த ஹீரோகிட்ட கதை சொல்லுங்க, அவருக்குப் பிடிச்சிருந்தா படம் பண்ணலாம். ஏன்னா அவரோட கால்ஷீட்தான் இப்ப என் கையில இருக்கு'' என உண்மை நிலவரத்தைச் சொல்லிலிவிடுகிறார்கள். சரி, அந்த ஹீரோகிட்டயே கதைய சொல்லிலிருவோம் என முயற்சியில் இறங்கும்போது, அந்த இணை- இயக்குநர்கள் படும் கஷ்டம் சொல்லிலிமாளாது.

இந்த வாரம் விஷால் கதை கேட்கும் லட்சணத்தைப் பார்ப்போம்.

vvv

Advertisment

நடிகர் சங்க பொதுச் செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் என சங்க நடவடிக்கைகளில் பிஸியாக இருந்தார். இப்போது தயாரிப்பாளர்கள் சங்கம், அரசாங்கத்தின் கட்டுப் பாட்டிற்குள் போய்விட்ட தால், அங்கே விஷாலுக்கு வேலையில்லை. அதே போல் நடிகர் சங்கத் தேர்தல் நடந்து முடிந்தாலும் அதன் முடிவை நிறுத்தி வைத்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.

மொத்தம் மூன்று செல்ஃபோன் களை வைத்திருப்பார் விஷால். ஆனால் எந்த போனையும் அட்டெண்ட் பண்ணமாட்டார்.

அப்புறம் எதுக்கு அவருக்கு மூணு போன்? இதற்கு விஷால் தான் பதில் சொல்லவேண்டும். சரி, போனா போகட்டும், விஷாலிலின் மேனேஜரை தொடர்பு கொள்ளவேண்டும் என்றால், முதலில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். நான்கு நாட்களோ, ஐந்து நாட்களோ கழித்து, விஷாலில் தோஸ்துகளான நடிகர்கள் ரமணா, நந்தா ஆகியோரை காண்டாக்ட் பண்ணச் சொல்லிலி பதில் மெசேஜ் அனுப்புவார் மேனேஜர்.

இதில் ரமணாவும் போனை அட்டெண்ட் பண்ணாத பார்ட்டி தான். ஆனால் நந்தா அப்படி யெல்லாம் இல்லை. ""என்னோட பட ஷூட்டிங்ல இருக்கேன் (என்ன படம்னு அவருக்கே தெரியுமோ தெரியாதோ) செப்டம்பர் கடைசில போன் பண்ணுங்க, இல்லேன்னா நவம்பர் ஃபர்ஸ்ட் வீக்ல போன் பண்ணுங்க, விஷாலிடம் கேட்டுட்டு அதுக்கப்புறமா சொல்றேன்'' என்பாராம்.

""ரமணாவும் நந்தாவும் உருப்படியா கதை கேட்டிருந்தா, இப்ப ஜூனியர் ஆர்டிஸ்ட் ரேஞ்சுக்கு அவர்களின் நிலைமை சரிந்திருக்குமா?'' இதுதான் பல அறிமுக இயக்குநர்களின் ஆதங்கமும் கேள்வியும்.

சரியான ஆதங்கம், நல்ல கேள்விதானே. விஷால் சுந்தர் சி. காம்பினேஷனில் "ஆக்ஷன்' முடிந்து ரிலீசுக்கு ரெடியாக உள்ளது.

ஈ.பா. பரமேஷ்வரன்

cini170919
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe