மிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்.கே.வுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது.

Advertisment

கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்திவரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ' என்கிற புதிய தயாரிப்பை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துகிறார் ஆர்.கே.

Advertisment

rk

இந்த நிகழ்ச்சியில் "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ'-வை இந்தியா மட்டுமல்லாது; உலகெங்கிலும் எடுத்துச்செல்லும் நிறுவனத் தூதராக இணைந்துள்ள பாலிலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கலந்துகொண்டு அறிமுகப்படுத்தினார்.

இவர்களுடன் பாலிலிவுட் நடிகரும் "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ'-வின் விளம்பர மாடலும் சமீபகாலமாக "ஐபிஎல் மேன்' என அழைக்கப்படுபவருமான சமீர் கோச்சரும் கலந்துகொண்டார்.

Advertisment

அனைவரையும் வரவேற்றுப் பேசிய வி கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரபா ரெட்டி,""வி கேர் என்றாலே தனித் தன்மை என உறுதியாக சொல்லலாம்.

வி கேர் நிறுவனத்தின் மைல்கல் என்று சொல்லும் விதமாக "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ'-வை அறிமுகப்படுத்துகிறோம் என்றார்.''

பாலிலிவுட் நடிகர் சமீர் கோச்சர் பேசியபோது,

""ஆர்.கே என்னை சந்தித்து இந்தத் தயாரிப்பு பற்றி விளக்கியபோது ஆச்சரியமாக இருந்தது. நம்புவதற்கு கொஞ்சம் சிரமமாகவும் இருந்தது.

ஆனால் இதை நானே அனுபவப்பூர்வமாகப் பயன்படுத்தியபோது அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை.

நிச்சயம் ஆர்.கே.வின் இந்தத் தயாரிப்பு உலக அளவில் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை'' என கூறினார்.

நடிகர் விவேக் ஓபராய் பேசும்போது,""இன்று உலகம் முழுவதும் காலை உணவாக ரசித்து சாப்பிடும் இட்லிலி சாம்பாரா கட்டும்,இன்று உலகம் முழுவதும் அறியப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகட்டும்,தென்னிந்தியா எப்போதுமே மிகச்சிறந்த தயாரிப்புகளைத் தந்துள்ளது.

rk

ஏன் என்னுடைய அம்மா, மனைவி எல்லாருமே தென்னிந் தியாவைச் சேர்ந்தவர்கள்தான்.

நடிகர் ஆர்.கே ஒரு பிசினஸ்மேனாக என்னிடம் வந்து இந்த "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ'-வைப் பற்றிச் சொன்னதும் ஆரம்பத்தில் நான் நம்ப மறுத்தேன்.

காரணம் அமோனியா இல்லாமல், பிபிடி இல்லாமல் ஒரு ஹேர் டை என்பது எப்படி சாத்தியமாகும்..?

ஆனால் நானே அதை நம்பும்விதமாக எனது சந்தேகங்களை நிவர்த்திசெய்து, அது சாத்தியம்தான் என நிரூபித்துக் காட்டினார் ஆர்.கே.

நான் எப்போதுமே ஒரு விஷயத்தை மக்களுக்கு எந்தவிதமாகப் பயன்படும் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பவன்.

அதில் எனக்கும் ஆர்.கே.வுக்கும் ஒரேவிதமான சிந்தனை என்பதை அறிந்துகொண்டேன். இப்போது சொல்கிறேன்.

இந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக மட்டுமல்ல; இந்த நிறுவனத்தின் பங்குதாரராகவும் என்னை இணைத்துக்கொள்ளவும் ஆசைப்படுகிறேன். அந்தளவுக்கு இந்த "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ' இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப்போகிறது'' என்றார்.

வி கேர் நிறுவனத்தின் சேர்மனும் நடிகருமான ஆர்.கே பேசியபோது,""இன்று பலரும் டை அடிப்பதற்காகப் படும் சிரமங்களையும், அதனால் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மனதில்வைத்து இதற்கு மாற்றாக ஒன்றைக் கண்டுபிடிக்கவேண்டும் என்கிற உத்வேகத்தால் பல மாத பரிசோதனைக்குப் பின்பு உருவான தயாரிப்புதான் எங்களின் "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ.' டை அடிக்கும்போது கறைபடியுமோ, அலர்ஜி ஆகுமோ என்கிற கவலை இனி இல்லை. காரணம்- இதில் அந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் அமோனியா, பிபிடி என எதுவுமே சேர்க்கப் படவில்லை.

வழக்கமான ஷாம்பூவைப் பயன்படுத்துவதைப்போல இதைப் பயன்படுத்த முடியும். சுமார் ஆறு மாத காலமாக ஒரு லட்சம் பேருக்கு "விஐபி ஹேர் கலர் ஷாம்பூ'-வை கொடுத்து, சோதித்துப் பார்த்து இதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இப்போது நேரடி மார்க்கெட்டில் அறிமுகப்படுத்து கிறோம்.

கிளவுஸ்கூட இல்லாமல் சாதாரணமாக கைகளில் எடுத்துப் பயன்படுத்தும் ஹேர் கலர் ஷாம்பூ என்னால் கண்டுபிடிக் கப்பட்டு உருவாக்கப்பட்டு பரி சோதனைக்குப் பிறகு மக்களிடம் கொண்டு வந்திருக்கிறோம்.

இதற்காக ஒரு வருடம் படத்தில்கூட நடிக்கவில்லை. இனி இதை மக்களிடம் சேர்த்துவிட்டு மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமான படம் ஒன்றில் நடிக்க இருக்கிறேன்.

அந்தப் படம் பலரின் கண்களைத் திறக்கும் படமாக இருக்கும்'' என்றார் பெருமையுடன்.