Advertisment

ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய ஹீரோ!

/idhalgal/cinikkuttu/hero-who-fulfills-fans-desire

"மெட்ரோ' படத்தின்மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் ஹீரோவாக நுழைந்தவர் சிரிஷ்! அந்தப் படத்தின் பிரம் மாண்ட வெற்றி, சிரிஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்களை வாரிக்கொடுத்துள்ளது. அடுத்த டுத்து ஏழு படங்களில் புக் ஆகியிருக்கிறார் "மெட்ரோ' சிரிஷ். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், சிரிஷின் ரசிகர்களை மெய்சிலிலிர்க்க வைத்திருக்கிறது. உசிலம்பட்டியைச் சேர

"மெட்ரோ' படத்தின்மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் ஹீரோவாக நுழைந்தவர் சிரிஷ்! அந்தப் படத்தின் பிரம் மாண்ட வெற்றி, சிரிஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்களை வாரிக்கொடுத்துள்ளது. அடுத்த டுத்து ஏழு படங்களில் புக் ஆகியிருக்கிறார் "மெட்ரோ' சிரிஷ். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், சிரிஷின் ரசிகர்களை மெய்சிலிலிர்க்க வைத்திருக்கிறது. உசிலம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் "மெட்ரோ' சிரிஷின் தீவிர ரசிகர். சென்னை வந்த கார்த்திக், "மெட்ரோ' சிரிஷை சந்தித்து, ""உங்களின் தீவிர ரசிகன் நான். எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. எனது திருமணத்திற்கு வரவேண்டும். நீங்கள் வந்தால் நானும் எனது குடும்பத்தினரும் மகிழ்வோம்'' என சொல்லிலி, தனது திருமண அழைப்பிதழை தந்திருக்கிறார்.

Advertisment

srishi

அழைப்பிதழைப் பெற்றுக் கொண்ட "மெட்ரோ' சிரிஷ், அந்த ரசிகருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவிட்டு, ""ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கேன். வாய்ப்புக் கிடைக்குமா? என பார்க்கிறேன்'' என்றுகூறி அனுப்பிவைத்தார். இந்த சம்பவம் நடந்து 15 நாட்கள் கடந்து போனது. "பிஸ்தா' படத்தின் படப்பிடிப்பில் வெளியூரில் இருந்த சிரிஷ், ரசிகரின் திருமணத்தை நினைவில் வைத்திருந்திருக்கிறார்.

Advertisment

திருமணத்திற்கு முதல்நாள், ""எனக்கு ஒரு நாள் லீவ் வேண்டும்'' என இயக்குநரிடம் கேட்டு, ஷூட்டிங்கில் இருந்தபடியே, சுமார் 10 மணி நேரம் காரில் பயணித்து, உசிலம்பட்டி சென்று, ரசிகர் கார்த்திக்கின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்தியிருக்கிறார் "மெட்ரோ' சிரிஷ்.

அவரது வருகைகண்டு கார்த்திக்கும் அவரது குடும்பமும் திக்குமுக்காடிப் போயிருக்கிறது. சிரிஷின் கைகளைப் பிடித்துக்கொண்டு, ""உங்களுக்கு இருக்கும் பிஸியில் நீங்கள் வருவீர்கள் என எதிர் பார்க்கவே இல்லை சார்! இந்த எளியவனின் ஆசையை நிறைவேற்றிவிட்டீர்கள்'' என நெகிழ்ந்தார் கார்த்திக். வளர்ந்துவரும் ஒரு இளம் கதாநாயகன், ரசிகரின் ஆசையை நிறைவேற்றி யிருப்பது பாராட்டுக்குரியது!

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe