Advertisment

ஹீரோ டார்ச்சர்! ஹீரோயின் அம்மா கதறல்!

/idhalgal/cinikkuttu/hero-torture-heroines-mother-screams

பாலாவின் உதவி இயக்குநர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் "மயூரன்'. ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரிலீசாகி இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு ஹீரோவான அஞ்சன் தேவையும், ஹீரோயி னான அஸ்மிதாவைய

பாலாவின் உதவி இயக்குநர், நந்தன் சுப்பராயன் இயக்கும் திரைப்படம் "மயூரன்'. ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரிலீசாகி இருக்கிறது. படத்தின் புரமோஷனுக்கு ஹீரோவான அஞ்சன் தேவையும், ஹீரோயி னான அஸ்மிதாவையும் தயாரிப்பாளர்கள் அழைத்தனர்.

Advertisment

ஆனால், அஸ்மிதாவின் அம்மாவோ, ""கதாநாயகன் வருவதாக இருந்தால் என் பெண்ணை அனுப்பமாட்டேன்'' என்று தடை போட்டார்.

ff

ஏன்னா, ""என் மகள் கோடீஸ்வரி என்பதால், அவளை... லவ் பண்ணுகிறேன் என்ற பெயரில் லவ் டார்ச்சர் கொடுத்து வருகிறார் ஹீரோ. அதனால் புரமோஷனுக்கு என் பெண் வர மாட்டாள்'' என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிட்டாராம். "கதாநாயகி வராத பட்சத்தில் நான் மட்டும் எதற்காக வரவேண்டும்' என அஞ்சன் தேவும் டிமிக்கி கொடுத்துவிட்டார்.

இருவரையும் ஒருசேர அழைக்காமல் புரமோஷன் எப்படி செய்வதென்று தயாரிப்பாளர்கள் தவியாகத் தவித்தார்கள். ""படத்திற்கு விளம்பரம் அமைவதே பெரிய கஷ்டம்! கதாநாயகன்- கதாநாயகி இருவரும் இப்படி செய்தால், எப்படி எங்கள் படத்திற்கு புரமோஷன் செய்யமுடியும்...'' என்று புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.

cine130819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe