Advertisment

ஹிரோ- ஹீரோயின் "கனெக்ஷன்' சாரா அலிகான் புதுவிளக்கம்!

/idhalgal/cinikkuttu/hero-heroine-connection-by-sarah-alicon

பாலிவுட் ஹீரோ சைஃப் அலிகான் நடிப்பில் 11 ஆண்டு களுக்கு முன் வெளிவந்தது "லவ் ஆஜ் கல்' திரைப்படம். அதே தலைப்பில் தயாராகும் புதிய படத்தில் அவருடைய மகள் சாரா அலிகான் நடிக்கிறார்.

Advertisment

இம்தியாஸ் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்திக்குடன் சாரா டேட்டிங்கில் இருப்பதாகவும், இருவருக்குமிடையே லவ் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டதாகவும் இந்திச் செய்திகள் பரபரக்கின்றன.

இந்நிலையில்தான் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டில் பேசிய சாரா, மிகுந்த

பாலிவுட் ஹீரோ சைஃப் அலிகான் நடிப்பில் 11 ஆண்டு களுக்கு முன் வெளிவந்தது "லவ் ஆஜ் கல்' திரைப்படம். அதே தலைப்பில் தயாராகும் புதிய படத்தில் அவருடைய மகள் சாரா அலிகான் நடிக்கிறார்.

Advertisment

இம்தியாஸ் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்திக்குடன் சாரா டேட்டிங்கில் இருப்பதாகவும், இருவருக்குமிடையே லவ் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகிவிட்டதாகவும் இந்திச் செய்திகள் பரபரக்கின்றன.

இந்நிலையில்தான் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டில் பேசிய சாரா, மிகுந்த பதட்டத்துடன் இருப்பதாகக் கூறினார். அவருடைய தந்தை நடித்த படம் என்பதால் பயமா என்று கேட்டபோது, ""அதெல்லாம் இல்லை. எனது தந்தை காலத்து லவ் வேறு. இன்றைக்கு இருக்கிற லவ் வேறு. இன்றைய காதலர்களைப் பற்றிய கதைதான் இது. எனது பதற்றத்துக்குக் காரணம், என்மீது ஏராளமான அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கும், மீடியாவுக்கும் படம் திருப்தியாக வேண்டுமே என்பதுதான்'' என்று அருமையாக ஐஸ் வைத்தார்.

ரசிகர்களையும் மீடியாவையும் அட்ராக்ட் செய்த சாரா, டைரக்டர் இம்தியாஸை சரமாரியாகப் புகழ்ந்து அவரையும் இம்ப்ரெஸ் செய்தார். ""தனது கதாநாயகி எந்தமாதிரியான உணர்வு களுடன் இருக்கிறாளோ அதே உணர்வை என்னிடம் பெறுவதற்கு இம்தியாஸ் மெனக்கெடுவார்'' என்றார்.

Advertisment

sara

""படத்தின் கதாநாயகி ஜோவும் நானும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான கேரக்டர்தான். இருவருக்குமே முன்னேற் றம்தான் முக்கிய இலக்கு. ஜோவும் நானும் அம்மாவின் வளர்ப்பில்தான் இருக்கிறோம்.

ஆனால், டெல்லிப் பெண்ணான ஜோ, பிறரால் பாதிக்கப்படுகிறாள். நான் அப்படி பாதிக்கப்பட்டதில்லை. என்னைப்போல இல்லாமல், ஜோ போராட்டக்காரியாக இருக்கிறாள். அவளைப்போல நான் வாழ்க்கையை அணுகுவதில்லை. நான் ரொம்ப ரிலாக்ஸ்ட் ஆனவள். ஆனாலும், இம்தியாஸ் ஸாரின் உதவியோடுதான் நான் ஜோவாக மாற முடிந்தது'' என்கிற சாரா, தாயின் வளர்ப்பைப்பற்றி பூரிப்புடன் பேசுகிறார்.

காதலைப் பொருத்தமட்டில், ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாதிரிதான் இருக்கிறது. எனக்குள் காதல் வந்தால் நிச்சயமாக எல்லாருக்கும் தெரிந்துவிடும். அப்படி காதல் வந்தால் அது உண்மையானதாகவும், பைத்தியமானதாகவும் இருக்கும்.

என்னையும் கதாநாயகன் கார்த்திக்கை யும் இணைத்து பல செய்திகள் வெளிவருகின்றன. இந்தப் படத்தில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கார்த்திக் புரிந்து கொள்ளக்கூடிய மனிதர். விட்டுக்கொடுத் தார். கற்றுக்கொடுத்தார். உதவியாக இருந்தார். படத்தின் வெற்றிக்கு எங்களுக் கிடையிலான கெமிஸ்ட்ரி உதவும். மற்றபடி இருவருக்கும் இடையே காதலெல்லாம் இல்லை'' என சடசடவென வெடித்தார் சாரா அலிகான்.

ஆனந்த் எல். ராய் டைரக்ஷனில் தனுஷ்- சாரா அலிகான் நடிக்கும் இந்திப்பட ஷூட்டிங் வாரணாசியில் நடந்துவருகிறது.

cini170320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe