Advertisment
/idhalgal/cinikkuttu/helping-hand

திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக் குறிச்சி, அரியூர், பாரப்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49-க்கும் மேற்பட்டவர்கள் (பெரும் பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவிலுள்ள தனியார் டவர் நிறுவனத்திற்குப் பண

திருநெல்வேலி மாவட்டம் தலைவன் கோட்டை, மளடிக் குறிச்சி, அரியூர், பாரப்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து சுமார் 49-க்கும் மேற்பட்டவர்கள் (பெரும் பாலானோர் முக்குலத்தோர்) மலேசியாவிலுள்ள தனியார் டவர் நிறுவனத்திற்குப் பணிக்குச் சென்றனர்.

Advertisment

அங்கு நிர்வாகத்திற்கும் பணியாற்றும் தமிழர்களுக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக இவர்களுக்கு சம்பளம் மற்றும் அடிப்படை வசதிகள் மறுக்கப் பட்டது. சம்பள நிலுவையின் காரணமாக தகராறு ஏற்பட இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

Advertisment

karunas

இதனால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அங்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் தலைமறைவானார்கள். கிட்டத்தட்ட பல நாட்கள் உண்ண உணவும் உறைவிடமும் இல்லாமல் காட்டிலேயே தங்கினர். இந்த தகவல் முக்குலத்தோர் புலிப் படையின் நெல்லை மாவட்ட செயலாளர் ராஜகுணசேகர பாண்டியன்மூலமாக சேது கருணாஸ் தேவர் எம்.எல். ஏ.வுக்குத் தெரியவந்தது. இந்த தகவலை மலேசியாவிலுள்ள குமார்மூலமாக சம்பந்தபட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட கருணாஸ் தேவர் எம்.எல்.ஏ மலேசியாவிலுள்ள பாத்தி கேம்ப் முருகன் கோவிலுக்கு பாதிக்கப்பட்ட வர்களை அழைத்து வந்து அதிகாரிகள் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

மக்கள் பிரதிநிதிகள் உதவியுடன் மலாக்கா அதிகாரிகள் ஜக்கி, கண்ணன், குணா ஆகியோர்மூலமாக 49 தமிழர்களுக்கும் திரும்பவும் பணியாற்றும் வாய்ப்பையும், தங்குவதற்கு ஒரு ஹோம் கேம்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

cine181218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe