தேனி மாவட்டம் அல்லி நகரத்தைச் சேர்ந்த மாணவி உதயகீர்த்திகா. இவர் தேனியில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர். தனது ஏர் கிராப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினீயரிங் படிப்பை உக்ரைன்- கார்கிவ்விலுள்ள நேஷனல் ஏர்ஃபோர்ஸ் யுனிவர்சிட்டியில் படித்துள்ளார். (பெற்றுள்ள மதிப்பெண்: 92.5%/ "A' கிரேடு). 2022-ஆம் ஆண்டு இந்தியாவின் "இஸ்ரோ' சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்படுகிற விண்வெளி வீரர்கள் குழுவில் இடம்பிடித்து இந்தியாவுக்கான விண்வெளி வீராங்கனை ஆவதே இவர் லட்சியம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/help.jpg)
தற்போது, போலந்து நாட்டிலுள்ள விண்வெளி ""Analog austronaut training centre'' என்ற விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி மையத்தில் Astronaut பயிற்சிபெறுவதற்கு இடம் கிடைத்துள்ளது. பயிற்சிக் கட்டணம், தங்குமிட கட்டணம், உணவுச் செலவுகள், விமானக் கட்டணம் ஆகியவகையில், இப் பயிற்சிக்கு எட்டு லட்சம் (8,00,000) ரூபாய்க்கும்மேல் தேவைப்படுகிறது.
மாணவியின் பயிற்சிக்காக தேவைப்படும் தொகையை "மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்தின் சார்பாக மன்ற தலைமைச் செயலாளர் குமரன் மற்றும் தேனி நகர தலைவர் விக்னேஷ் ஆகியோர் மூலம் வழங்கினார்.
தொலைபேசிமூலம் உதயகீர்த்திகாவிடம் பேசி பாராட்டியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-07/help-t.jpg)