விஜியாலயா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் "சாதனைப் பயணம்' படம்மூலம் தமிழ் சினிமா வில் உதயமாகிறார் "கலக்கல் ஸ்டார்' பரமேஸ்வரர். இப்படத்தில் ஹீரோவாக நடிப்பதோடு, படத்தை யும் தயாரிக்கும் பரமேஸ்வரர், "காதல் டாட்காம்', "த்ரி ரோசஸ்', "மேடை', "பீஸ்மர்' உள்ளிட்ட சுமார் 15-க்கும் மேற்பட்ட படங்க ளில் சிறுசிறு வேடங்களில் நடித்திருக்கிறார்.
தஷி இசையமைக்கும் இப்படத்திற்கு மகேஷ் சுப்ரமண்யம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் மாதேஷ்வரா, படம் குறித்துக் கூறுகையில், ""மனிதர்களின் வாழ்க்கையே ஒரு சாதனைப் பயணம்தான். அந்தவகையில், சாதாரண விவசாயி தனது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளித்து எப்படி வெற்றிபெறுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இதில், பிள்ளைகள் வளர்ந்ததும் பெற்றோர் களைக் கைவிட்டுவிடுவது பற்றியும் பேசியிருக்கிறோம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-03/heis-t.jpg)