ருணாச்சலம் தியேட்டர்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பாக ஏ. சரவணன் தயாரிக்கும் படத்திற்கு "லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க' என வித்தியாசமாக தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

Advertisment

director

இந்தப் படத்தில் ஆச்சு என்கிற புதுமுகம் கதாநாயக னாக நடிக்கிறார். நாயகியாக பிரிஷா என்கிற புதுமுகம் அறிமுகமாகிறார்.

மற்றும் நளினி, "நாடோடிகள்' கோபால், கோதண்டம் "பரோட்டா' முருகேஷ், ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

படம் பற்றி படத்தின் இயக்குநர் சு. சத்தியசீலனிடம் கேட்டோம்...

""இரண்டு மணி நேரம் மக்களை சிரிக்க வைப்பதுதான் எங்களது நோக்கம்.

தயாரிப்பாளர் சரவணன் திருவண்ணாமலையில் அருணாசலம் தியேட்டரை பல வருடங்களாக நடத்திக்கொண்டிருக்கிறார். தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள்? என்ன மாதிரியான காட்சிகளை கைதட்டி ரசிக்கிறார் கள். என்ன மாதிரியான படத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது அவருக்கு அத்துப்படி.

அப்படிப்பட்ட சரவணன் தேர்ந்தெடுத்த கதைதான் இந்த "லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க' கதை'' என்கிறார்.