""நான் ஒன்னும் சும்மா இல்லீங்க. ஓய்வே இல்லாம படப்பிடிப்பு இருக்கு'' என்கிறார் நந்திதா ஸ்வேதா. "அட்டைக்கத்தி' படத்தில் தொடங்கி "அசுரவதம்' படம் வரைக்கும் கிராமத்துப் பெண் கேரக்டரே கிடைக்கிறது என்ற வருத்தம் அவரு டைய வார்த்தைகளில் வெளிப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nanditha.jpg)
"அசுரவதம்' படத்தில் தனது கேரக்டர் வித்தியாசமாக இருக்கும் என்கிறார். அதைத்தாண்டி எதையும் சொல்ல மறுக்கும் அவர், இந்தப் படத்தில் தனது நடிப்பு மெருகேறியிருப்பதை ரசிகர்கள் உணர்வார்கள் என்று மட்டும் சொல்கிறார்.
"நெஞ்சம் மறப்பதில்லை' படம் நீண்டநாட்களாகப் படப் பிடிப்பில் இருக்கிறது. "இடம் பொருள் ஏவல்' என்ற படமோ தமிழகம் தவிர உலகின் பல பகுதிகளுக்கு போய் பாராட்டு வாங்குகிறது. இது அவரை பாதிக்கவில்லையா என்று கேட்டால், ""அதைப்பற்றியெல்லாம் நினைக்கிற அளவுக்கு எனக்கு நேரமே இல்லை. "அசுரவதம்' ஷூட்டிங் டிசம்பரில் தொடங்கி யது. அப்போதிருந்து பத்து நாட்கள்கூட ஓய்வே இல்லை. தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களுக்கு இடையே தொடர்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறேன். பெரிய நடிகர்கள் படத்தில்தான் நடிப்பேன் என்று சொல்லப் படுவதெல்லாம் தவறு. "நர்மதா' படம் கதாநாயகியைச் சுற்றிய படம்'' என்று விளக்குகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-07/nanditha-t.jpg)