தாயின் அருள் புரொடக்‌ஷன்ஸ் தயாரித் திருக்கும் படம் "எதிர்வினையாற்று'. இதில் அலெக்ஸ், சனம்ஷெட்டி, ஆர்.கே.சுரேஷ், "ஆடுகளம்' நரேன், சம்பத் ராம், அனுபமா குமார், லட்சுமி பிரியா உள்ளிட்ட பலர் நடித் துள்ளார்கள். இந்தப் படத்தின் கதை, திரைக் கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். நாயக னான அலெக்சே படத்தைத் தயாரித்தும் இருக்கிறார்.

Advertisment

ss

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியவர்கள்.

அலெக்ஸ் ""முதல் நன்றி என் அம்மாவிற்குத்தான்.

அவரிடம் ஒரு படத்தை நானே நடித்து இயக்க வேண்டும் என்றதும், என் அம்மா என்னை ஊக்கப்படுத்தினார். இந்தப் படத்தை இரவு- பகலாக உழைத்து 24 நாட்களில் முடித்தோம்.

அதற்குக் காரணம் என் டைரக்‌ஷன் டீம்தான். சனம் ஷெட்டி மிகவும் சவுகரியமான நடிகை.'' சனம் ஷெட்டி ""என்மீது நம்பிக்கை வைத்து இப்படத் தில் வாய்ப்பு தந்த அலெக்ஸுக்கு நன்றி.

தயாரிப்பாளர் அனிதா மேடம் அவர் களுக்கும் நன்றி.''

Advertisment

நடிகர் ஆர்.கே. சுரேஷ் ""படத்தின் தயாரிப்பா ளர் அனிதா மேடத்திற்காகவே இதில் நான் நடிக்க ஒத்துக் கிட்டேன். அலெக்ஸ்மேல் எனக்கு யோசனை இருந்தது. டாக்டராக இருந்தவர் எப்படி படத்தைச் சரியாக எடுக்கப் போகிறார் என்று நினைத்தேன்.

ஆனால், அவர் கதை சொல்லிய விதத்திலே இவர் சரியாக எடுத்து விடுவார் என்று முடிவுசெய்து விட்டேன். எல்லா படங்களுக் கும் தியேட்டர் கிடைக்க வேண்டும் அப்போதுதான் திரைத்துறை நன்றாக இருக்கமுடியும்.''