Advertisment

சினிமா நிருபருக்கு ஹேப்பி பொங்கல்!

/idhalgal/cinikkuttu/happy-pongal-cinema-reporter

சிறந்த பத்திரிகையாளருக் கான எம்.ஜி.ஆர்- சிவாஜி விருதை "தினமலர்' நெல்லை குழுமத்தில் சினிமா நிருபராகப் பணியாற்றிவரும் செய்யாறு பாலு பெற்றார். டைரக்டர் கே.எஸ். ரவிகுமார், நடிகை அம்பிகா ஆகியோர் இணைந்து விருது வழங்கினார்கள்.

சிறந்த பத்திரிகையாளருக் கான எம்.ஜி.ஆர்- சிவாஜி விருதை "தினமலர்' நெல்லை குழுமத்தில் சினிமா நிருபராகப் பணியாற்றிவரும் செய்யாறு பாலு பெற்றார். டைரக்டர் கே.எஸ். ரவிகுமார், நடிகை அம்பிகா ஆகியோர் இணைந்து விருது வழங்கினார்கள்.

Advertisment

balu

தமிழ் சினிமாவின் முன்னணி மக்கள் தொடர்பாளர்களான மவுனம் ரவி, டைமண்ட் பாபு, ரியாஸ் அகமது, சிங்காரவேலு ஆகியோர் "இணைந்து நடத்திவரும் "வி4' அமைப்புமூலம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ல் எம்ஜிஆர்- சிவாஜி விருதுகள்’ சினிமா நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சினிமா பத்திரிகை நிருபர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. மறைந்த பிலிம் நியூஸ் ஆனந் தன் தொடங்கிவைத்த இந்த விருது வழங்கும் விழா 33-ஆவது ஆண்டாக நடந்தது. விழாவில் பிலிம் நியூஸ் ஆனந்தனின் 92-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

அந்தவகையில், 2018-ஆம் ஆண்டுக்கான எம்ஜிஆர் - சிவாஜி விருது வழங்கும் விழா சென்ற ஜனவரி 1-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவின்கீழ் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 25 ஆண்டுகளுக்கும்மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றி வரும் செய்யாறு பாலு, முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார இதழ்களில் பணியாற்றியவர்.

Advertisment
cine220119
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe