Advertisment

செம ஹேப்பி சங்கதிகள்!

/idhalgal/cinikkuttu/happy-happenings

சுமார் ஒன்றரை மாதங்களாகப் படப்பிடிப்போ மற்ற பின்னணி வேலைகளோ எதுவுமே நடக்காமல், சினிமா ஸ்டிரைக் நடந்ததால், வேலையின்றி பரிதவித்த சினிமா தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால். கியூப் கட்டணக் கொள்ளைக்கு எதிராகத்தான் இந்த ஸ்டிரைக் ஆரம்பமானது. கியூப்பும் விட்டுக் கொடுப்பதாக இல்லை, தயாரிப்பாளர்களும் விடுவதாக இல்லை. 45 நாட்களில் 15 தடவைக்குமேல் பேச்சுவார்த்தை நடந்தும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

Advertisment

vishal

பேச்சுவார்த்தை விஷயத்தில் சீனியர்கள் யாருடைய பேச்சையும் கேட்காமல் விஷால் வீம்பு பண்ணுவதால் இந்த இழுபறி. இதை "வீம்பு பண்ண

சுமார் ஒன்றரை மாதங்களாகப் படப்பிடிப்போ மற்ற பின்னணி வேலைகளோ எதுவுமே நடக்காமல், சினிமா ஸ்டிரைக் நடந்ததால், வேலையின்றி பரிதவித்த சினிமா தொழிலாளர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான விஷால். கியூப் கட்டணக் கொள்ளைக்கு எதிராகத்தான் இந்த ஸ்டிரைக் ஆரம்பமானது. கியூப்பும் விட்டுக் கொடுப்பதாக இல்லை, தயாரிப்பாளர்களும் விடுவதாக இல்லை. 45 நாட்களில் 15 தடவைக்குமேல் பேச்சுவார்த்தை நடந்தும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.

Advertisment

vishal

பேச்சுவார்த்தை விஷயத்தில் சீனியர்கள் யாருடைய பேச்சையும் கேட்காமல் விஷால் வீம்பு பண்ணுவதால் இந்த இழுபறி. இதை "வீம்பு பண்ணும் விஷால்! சீரழியும் சினிமா தொழிலாளர்கள்!' என்ற தலைப்பில் 2018 ஏப்.17 தேதியிட்ட "சினிக்கூத்து இதழில் கவர் ஸ்டோரியாக வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தி தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மத்தியில் பலமாக விவாதிக்கப்பட்டது.

தயாரிப்பாளர்கள் சங்கம்- திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்- கியூப் நிறுவனம் ஆகிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் ஆவண செய்யவேண்டுமென விஷால் தரப்பிலிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டது. ""மொதல்ல புதுப்படங்களை ரிலீஸ் பண்ணுங்க. ஸ்டிரக்கை வாபஸ் வாங்குவதற்கும் ஏற்பாடுகளைப் பண்ணிட்டு வாங்க.

Advertisment

vishal

அதுக்கப்புறமா முத்தரப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கலாம்'' என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கண்டிஷன் போட்டார். எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்த மூணு தரப்பும் அமைச்சரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டது, உடனே பேச்சுவார்த்தைக்கும் தயாரானது தமிழக அரசு.

இதன்படி ஏப். 17-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, இருதுறைகளின் உயரதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி எல்லாம் நல்லபடியாக முடிந்தது. தயாரிப்பாளர்களுக்கு நல்லது நடக்க வேண்டும், தொழிலாளர்களும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பதற்காக சில விஷயங்களை விட்டுக்கொடுத்து சாதனை படைத்திருக்கிறார் விஷால்.

ஸ்டிரைக் வாபஸ் ஆகிவிட்டது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின், ஏப்ரல் 20-ஆம் தேதிமுதல் படமாக கார்த்திக் சுப்புராஜின் "மெர்க்குரி' ரிலீஸ் ஆகிறது.

அதே தேதியிலிருந்து சினிமா படப்பிடிப்புகள், டப்பிங், எடிட்டிங், இசைக்கோர்ப்பு என அனைத்து வேலைகளும் ஆரம்பமாகின்றன. தொழிலாளர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் தெரிகிறது.

vishal

விஷால் அறிவித்த புதிய- புரட்சித் திட்டங்கள்

1. தமிழகம் முழுவதும் அனைத்து தியேட்டர்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, டிக்கெட் விற்பனை ஒழுங்குபடுத்தப்படும்.

2.இதனால் தயாரிப்பாளர்கள்- தியேட்டர் உரிமையாளர்களுக்கிடையே பரஸ்பர புரிதல் ஏற்படும்

3. தமிழகம் முழுவதும் ரூ. 150-க்கு மிகாமல் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

4. படம் ரிலீசாகும்போது ஏ, பி, சி என 3 சென்டர்கள் பிரிக்கப்பட்டு, அந்தந்த சென்டர்களுக்குத் தக்கவாறு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும்.

5. சென்சார் சர்டிபிகேட் அடிப்படையில் பட ரிலீஸ் தேதி வரிசைப்படுத்தப்படும்.

6. அடுத்த ஆண்டு மார்ச் வரை என்னென்ன படங்கள், எந்தெந்த தேதியில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதைக் கண்காணிக்க குழு அமைக்கப்படும்.

7. எல்லாவற்றுக்கும் மேலாக நடிகர்- நடிகைகளின் சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

20-ஆம் தேதி ரிலீசான "மெர்க்குரி'போல் சினிமாவும் பிரகாசிக்கட்டும். நடக்கட்டும். எல்லாமே நல்லதாக நடக்கட்டும். அனைவரும் வளமுடனும் நலமுடனும் வாழட்டும்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe