உடல் எடையை அதிகரிக்கும் கொலஸ்ட்ரால் செல்களை உறையவைத்து, உடலமைப்பை விரும்பியபடி செதுக்கும் "கூல்ஸ்கல்ப்டிங்' என்ற புதிய அறுவை சிகிச்சையற்ற மருத்துவ தொழில்நுட்பம் சென்னையில் அமைந்திருக்கும் ஜீ கிளினிக்கில் தொடங்கப்பட்டிருக்கிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hanshika_4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hanshika1.jpg)
இதற்கான அறிமுக விழா சென்னையிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதனை நடிகை ஹன்சிகா தொடங்கி வைத்தார். விழாவில் ஜீ கிளினிக்கின் நிர்வாக இயக்குநரும், மருத்துவ நிபுணருமான டாக்டர் வி. சேதுராமன், உடற்பயிற்சி ஆலோசகர் அஜித் ஷெட்டி, ஊட்டச்சத்து நிபுணர் வீணா சேகர், அலர்கான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
"கூல்ஸ்கல்ப்டிங்' என்பது அழகிய உடலமைப்பைப் பெறுவதற்கான சிறப்பு சிகிச்சையாகும். இது அறுவை சிகிச்சையற்றது. மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறை. உடலில் தங்கியிருக்கும் விரும்பத்தகாத கொழுப்புச் செல்களை உறையவைத்து அகற்றும் சிகிச்சை அல்லது செயலிழக்கச் செய்யும் சிகிச்சை. கிரையோலிபாலிஸிஸ் என்ற உறையவைக்கும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட கொழுப்பு செல்களை உறைய வைப்பதற்கும், குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து அதனை அழிப்பதற்கும், பின் அருகிலிருக்கும் திசுக்களை பாதிக்காமல் அதனை வெளியேற்றுவதற்கும் இந்த மருத்துவ உத்தி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய செல்கள் ஒருமுறை இறந்துவிட்டால் அவை உடலைவிட்டு இயல்பாகவே வெளியேறிவிடும் என்கிறார்கள்.
ஹன்சிகாவும் கொழுப்பைக் குறைத்து சிக்கென வந்திருந்தார்.
_________________
"பி.வி. 999'
நாட்டில் பற்றி எரியும் பாலியல் கொடுமை பற்றியும், தொழில்நுட்ப வளர்ச்சியால் நிகழும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் குறித்தும் பேசும் ஒரு படமாக- துளியும் ஆபாசக் கலப்பின்றி கண்ணியமாக உருவாகியுள்ளது. அப்படம் "பென் விலை வெறும் ரூபாய் 999.' சுருக்கமாக "பி.வி.999'.
இப்படத்தை அறிமுக இயக்குநர் வரதராஜ் இயக்கியுள்ளார். இவர் விளம்பரப் படங்கள், ஆவணப் படங்களில் பணியாற்றியவர். ஒளிப்பதிவு சதீஷ்குமார்- மோகன், இசை ஜூடோ சாண்டி, கலை ஜனார்த்தனம், நடனம் அர்ச்சனா, வசந்த்குமார்.
""சமூகத்தில் ஆணுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு உண்டு. ஆனால் பெண்களை ஒரு போகப் பொருளாகவே சமுதாயம் பார்க்கிறது. ஆண்களிடம் பெண்கள் பற்றிய பார்வை மாறியுள்ளது . அவர்களை சக மனுஷியாக நினைக்கவேண்டும், மதிக்கவேண்டும், நடத்த வேண்டும் என்பதை இப்படம் கூறுகிறது'' என்கிறார் இயக்குநர் வரதராஜ். இதில் நடித்த நடிகர்- நடிகைகளை முன்னணி நடிகர், நடிகையர் அறிமுகப்படுத்த உள்ளனர். நவம்பரில் திரைக்கு வரவிருக்கும் இந்த "பென் விலை வெறும் ரூபாய் 999 மட்டுமே' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மாதர் சங்கம் மற்றும் சமூக வலைத்தளங்களில் அதற்கு எதிராக கருத்துகளும் பரவின.
இப்படத்தின் மோஷன் போஸ்டரை நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-10/hanshika-t.jpg)