"பிக்பாஸ்' புகழ் ஆரவ்வுடன் நிகிஷா பட்டேல் ஜோடி போட்ட "மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இப்படத்தை "தல' அஜித்தின் ஆஸ்தான இயக்குநரான சரண் இயக்கியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nikeshpatel.jpg)
படம் பற்றி ஹீரோயின் நிகிஷா பட்டேல் என்ன சொல்றாருன்னா...
""படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. பாடல்கள் மிக அற்புதமாக வந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தைத் தவிர, எழில் சார் இயக்கியுள்ள "ஆயிரம் ஜென்மங்கள்' படத்திலும், இயக்குநர் கஸ்தூரி ராஜா சார் இயக்கத்தில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகின்ற "பாண்டி முனி' படத்திலும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இன்னொரு படத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் பெயரிடப் படாத ஒரு படத்திலும், நடிகர் நந்தாவுக்கு ஜோடியாக மற்றொரு படத்திலும் நடித்துவருகிறேன்.
ஆக மொத்தம், இந்த வருடம் ஆறு படங்கள் ரிலீசாகின்றன. அதனால், ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா... இடம்பிடிப்பதே எனது லட்சியம்'' என்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/nikeshpatel-t.jpg)