Advertisment

கை கொடுத்த விஷால்!

/idhalgal/cinikkuttu/handed-vishal

ன்னட டி.வி.சீரியல்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர் நவீன்குமார் கௌடா. "ஜம்பாடா ஹுடுஹி' என்ற கன்னட சினிமாவில் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாக யாஷ் என்ற பெயரில் அறிமுகமானார்.

Advertisment

tamana

அதன்பின் "மொஹ்ஹினா மனசு' என்ற படத்தின்மூலம் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராதிகா பண்டிட்டையே திருமணமும் செய்து க

ன்னட டி.வி.சீரியல்களிலும் விளம்பரப் படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தவர் நவீன்குமார் கௌடா. "ஜம்பாடா ஹுடுஹி' என்ற கன்னட சினிமாவில் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாக யாஷ் என்ற பெயரில் அறிமுகமானார்.

Advertisment

tamana

அதன்பின் "மொஹ்ஹினா மனசு' என்ற படத்தின்மூலம் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ராதிகா பண்டிட்டையே திருமணமும் செய்து கொண்டார்.

Advertisment

"மோடலசலா', "கிராதகா', "டிராமா', "ஹூஹ்லி', "கஜகேசரி' "மிஸ்டர்& மிஸஸ் ராமாச்சாரி', "மாஸ்டர் பீஸ்' என வரிசையாக ஹிட் கொடுத்து "ராக்கிங் ஸ்டார்' என்ற பட்டத்துடன் கன்னட சினிமாவின் வெற்றி ஹீரோவாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.

vishal

இப்போது கன்னட சினிமாவில் முதல்முறையாக மெகா மெகா பட்ஜெட்டில் "கே.ஜி.எஃப்-1' (கோலார் தங்கவயல்) என்ற படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கிறார் விஜய் கிரகண்டூர்.

பிரசாந்த் நீல் டைரக்ஷனில் யாஷ்- நந்தினி ஷெட்டி ஜோடி யில் உருவாகும் கோலார் தங்க வயலில் தமிழர்களின் வியர்வை யும் ரத்தமும் கலந்திருக்கும் உழைப்புக்கு மரியாதை கொடுத்திருக்கிறோம் என்கிறார் டைரக்டர் பிரசாந்த் நீல். அதேபோல் கன்னட சினிமா ஒன்று, அந்த மாநிலத்திற்கு வெளியே முதன்முதலாக ரிலீசாவ தும் இப்போதுதான். கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என ஒரே நேரத்தில் டிச.21-ஆம் தேதி ரிலீசாகிறது "கே.ஜி.எஃப்.' இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, சமீபத்தில் பெங்களூரூ பி.வி.ஆர். ஆடி-1 தியேட்டரில் மிக பிரம்மாண்டமாக நடந்தது. தமிழ்நாடு, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் என நான்கு மொழி சினிமா பத்திரிகையாளர்களையும் பெங்களூருக்கு அழைத்து, கெத்து காட்டினார்கள் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூரும் ஹீரோ யாஷ்ஷும்.

ஹீரோ யாஷ் குடும்ப நண்பர் என்பதால், "கே.ஜி.எஃப்'ஐ தனது விஷால் பிலிம் ஃபேக்டரி பேனர் மூலம் தமிழில் ரிலீஸ் செய்கிறார் விஷால். டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த விஷாலுக்கு செம வரவேற்பு கொடுத்து அசத்தி னார்கள். விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டியும் நடிகர் அம்பரீஷும் யாஷ் புகழ் பாடினார்கள்.

-ஈ.பா. பரமேஷ்

cine111218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe