லிம்பியா மூவிஸ் சார்பாக எஸ். அம்பேத்குமார் தயாரித்துள்ள "ஜிப்ஸி' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு வினர் உள்பட பல்வேறு ஆளுமைகள் கலந்துகொண்டனர். படத்தின் பாடல் கள், ட்ரைலர் வெளியீட்டு விழாவோடு, நிருபமா தத் எழுதிய "துணிவின் பாடகன் பாந்த் சிங்' என்ற ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டது. இந்த நூலை தமிழில் கமலாலயன் மொழிபெயர்த் திருக்கிறார். ஒரு எளியமனிதன் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சாராம்சத்தைக் கொண்டது இப்புத்தகம். அதேபோல் "ஜிப்ஸி' படமும் அந்தக் களத்தை தாங்கி நிற்கக்கூடியதே.

Advertisment

jeeva

விழாவில் தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசும்போது, ""நானும் ராஜு முருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சின்னபட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டிலிருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவுசெய்தோம். அதன்பின் இந்தப்படம் பெரியபடமாக வளரத் துவங்கியது. எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உதவி வருகிறார்கள்'' என்றார்.

jeeva

Advertisment

படத்தின் ஹீரோவான ஜீவா, ""ஜிப்ஸி' எனக்கு ஒரு பெரிய பயணம். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்தேன். "ஜிப்ஸி' ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நாம போன், நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால், பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதுபோல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர்முதல் கன்னியாகுமரிவரை பயணித்திருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்திருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்துதான். ராஜுமுருகன் எழுத்து, உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராஜுமுருகன் ஒரு கம்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்கள்தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த் சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்த மேடை மிகச்சிறப்பான மேடை'' என நெகிழ்ச்சியுடன் பேசினார்.