நான் நடிகை லதா ராவ். சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி நான்கு மொழிகளில் நடித்தும், வெள்ளித்திரையில் கால்பதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சின்னத் திரையில் இருந்து ஒதுங்கி, அதற்கான முயற்சிகளைத் தொடர்ந் தேன். முதலிலில் வடிவேலுக்கு ஜோடியாக "தில்லாலங்கடி' என்ற படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன்.

Advertisment

latha

அதைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் இயக்கத்தில் "ஈசன்', சமுத்திரக்கனி இயக்கத்தில் "நிமிர்ந்து நில்', கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் "முடிஞ்சா இவன புடி' என பல படங்களில் நடித்தேன். இப்பொழுது வெளியான "கடிகார மனிதர்கள்' படத்தில் நாயகியாக அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

Advertisment

அடுத்து வெளிவர இருக்கும் பரத் நடிக்கும் "8', விவேக் & தேவயானி நடிக்கும் "எழுமின்' படங்களில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து சினிமாவில் எந்தவிதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன்.