ramgopalverma

ர்ச்சைக்கு மறுபெயர் ராம்கோபால் வர்மா என்று சொல்லலாம். 1989-ல் "சிவா' என்ற கிரைம் திரில்லர் மூலமாக சினிமாவுக்குள் வந்து, இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்தவர். சிவில் என்ஜினியரான இவர் சினிமாவை புதிய தளத்துக்கு எடுத்துச்சென்றார்.

Advertisment

இவருடைய படங்களில் செக்ஸ் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் என்று சொல்வார்கள். இதற்காக இவர்மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர், உளவியல்ரீதியான படங்கள் என்று நியாயப்படுத்துவார். நிஜமும் அதுதான். ஆந்திர அரசின் "நந்தி அவார்டு'களை பலமுறை பெற்றிருக்கிறார்.

Advertisment

a

இவருடைய "ரங்கீலா' சிறந்த கதை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் ஆகியவற்றுக்கு பிலிம்பேர் விருதைப் பெற்றது. "சத்யா', "கம்பெனி', "பூட்', "சர்கார்' என்று இவருடைய அனைத்துப் படங்களுமே விருது களைப் பெற்றவை தான்.

இவருக்கு ரொம்பப் பிடித்த நடிகை ஊர்மிளா. அவரை வைத்து பல சோதனை முயற்சிகளை மேற்கொண்டார்.

Advertisment

அத்தனையும் சர்ச்சைகள் தான். இப்போது மியா மல்கோவா என்ற நடிகையை வைத்து "காட் செக்ஸ் அண்ட் ட்ருத்' என்ற குறும்படத்தை எடுத்து அதுவும் சர்ச்சையை யும் சலசலப்பை யும் கிளு கிளுப்பை யும் கிளப்பியுள்ளது.