Advertisment

கின்னஸ் சாதனை! ஆர்கேவின் அதிரடி!

/idhalgal/cinikkuttu/guinness-world-records-rks-action

"எல்லாம் அவன் செயல்' படம்மூலம் பிரபலமானவர் நடிகர் ஆர்கே. பாலாவின் "தாரை தப்பட்டை', எஸ்.பி. ராஜ்குமாரின் "அழகர் மலை' போன்ற படங்களில் நடித்து சினிமாவால் அடையாளம் தெரிந்தாலும், சொந்தமாக பிஸ்னஸ் செய்வதிலும் கெட்டிக்காரர் ஆர்கே.

Adver

"எல்லாம் அவன் செயல்' படம்மூலம் பிரபலமானவர் நடிகர் ஆர்கே. பாலாவின் "தாரை தப்பட்டை', எஸ்.பி. ராஜ்குமாரின் "அழகர் மலை' போன்ற படங்களில் நடித்து சினிமாவால் அடையாளம் தெரிந்தாலும், சொந்தமாக பிஸ்னஸ் செய்வதிலும் கெட்டிக்காரர் ஆர்கே.

Advertisment

பல மாதங்களுக்குமுன்பு இந்தி சினிமாவின் பிரபல நடிகரான விவேக் ஓபராயை சென்னைக்கு அழைத்துவந்து "வி.ஐ.பி. ஹேர் டை'-யை அறிமுகப் படுத்தினார் ஆர்கே.

Advertisment

rk

இப்போது அதே இந்தி சினிமாவில் புகழ்பெற்ற நடிகை யான கரிஷ்மா கபூரை சென்னைக்கு அழைத்துவந்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார் ஆர்கே. சாதனையின் விவரம் இதுதான்.

வி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவை கையில் உறை இல்லாமல், வெறுங்கை யால் தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவினால், ஒட்டு மொத்த வெள்ளை முடி, கருப்பு முடியாகிவிடும். இதை கின்னஸ் ரெக்கார்ட் அதிகாரி முன்பு, 1,500 பேரைவைத்து நேரடியாக செய்து காட்டி, சாதனைபுரிவதுதான் ஆர்கேவின் அதிரடித் திட்டம்.

இந்த திட்டத்திற்காக சென்னை நசரத்பேட்டை அருகே இருக்கும் இ.வி.பி.பிலிம் சிட்டியில் மெகா அரங்கு அமைக்கப்பட்டு, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று கின்னஸ் சாதனையும் புரிந்து,லண்டனிலிருந்து வந்திருந்த கின்னஸ் ரெக்கார்ட் அதிகாரியிடமிருந்து சர்ட்டிபிகேட்டையும் வாங்கிவிட்டார் ஆர்கே.

-பரமேஷ்

ஸ்டில்ஸ்: எஸ்.பி.சுந்தர்

cine270819
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe