யுவிஎஸ் என்டர்டெயின்மென்ட் அமராவதி பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுகந்தி ஆறுமுகம் தயாரிக்கும் படம் "குற்றம் புரிந்தால்.'
ஹீரோவாக ஆதிக்பாபு, ஹீரோயினாக அர்ச்சனா நடிக்கிறார்கள். இவர்களுடன் "நாடோடிகள்' அபினயா, எம்.எஸ். பாஸ்கர், ராம்ஸ், நிஷாந்த், அருள் டி. சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kutram.jpg)
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டிஸ்னி இயக்குகிறார்.
படம் குறித்து இயக்குநர் டிஸ்னி கூறுகையில், ""யாரென்றே தெரியாத நபர்களால் தனது குடும்பத்தினர் கொல்லப்பட்டபிறகு, மன உளைச்ச லால் விரக்தியடைந்த ஒருவர் தன் கைகளில் நீதியை எடுக்கிறான்.
அவன் கொலையாளிகளை மட்டுமல்லாமல்; அவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிக்கக் காரணமாக இருந்தவர்களையும் தண்டிக்க குறிவைக்கிறான். அவன் தண்டித்தானா, இல்லையா என்பதை காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து சொல்லிலியிருக்கிறேன்'' என்றார்.
படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரில் நடந்துள்ளது. முழுப் படப்பிடிப்பும் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-08/kutram-t.jpg)