யிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பாக வி. ராஜா தயாரித்திருக்கும் "அருவா சண்ட' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன.

Advertisment

இந்தப் படத்திற்காக கவிப் பேரரசு வைரமுத்து எழுதிய ""இவ சித்தூரு சிறுக்கி செக்ஸான கிறுக்கி முத்தாடு மீசை முறுக்கி..

Advertisment

gst

இது சத்தான சரக்கு சர்வீசும் இருக்கு ஜி.எஸ்.டி. இல்ல உனக்கு'' என்ற பட்டைய கௌப்பும் பாடலுக்கு பல லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு டான்ஸ் மாஸ்டர் தீனா நடன அமைப்பில் படமாக்கப்பட்டது. ""எம் பேரு மீனாகுமாரி'' பாடல் புகழ் அனிதா இந்தப் பாடலை கிக் ஏற்றும் குரலில் பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலில் நடித்திருக்கும் மும்பை அழகி சுப்ரா கோஷிற்குத் தமிழில் இதுதான் முதல் படம். அவர் தனது நளினமான நடன அசைவுகளில் ரசிகர்களை வியக்கவைக்கும் அளவிற்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

தரண் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் கல்லேரி கலை அமைத்திருக்கிறார். ஸ்டண்ட்: தளபதி தினேஷ்.

ராஜா, மாளவிகா மேனன் நாயகன், நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் சரண்யா பொன்வண்ணன், "ஆடுகளம்' நரேன் சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, "காதல்' சுகுமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆதிராஜன்.