"மண்ணுக்குள் வைரம்', "வேதம் புதிது', "கனம் கோட்டார் அவர்களே', "காலையும் நீயே மாலையும் நீயே', "மேளம் கொட்டு தாலி கட்டு', "உழைத்து வாழ வேண்டும்' உட்பட ஏராளமான தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவேந்திரன்.

Advertisment

இப்போது "பச்சை விளக்கு' படத்தின்மூலம் மீண்டும் தமிழுக்கு வருகி றார். இந்தப் படத்தில் டாக்டர் மாறன், "அம்மணி' புகழ் மகேஷ் இருவரும் நாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர்.

Advertisment

jj

கன்னடப் படவுலகின் முன்னணி ஹீரோயின்களுள் ஒருவரான ரூபிகா முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்க, மேலும் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, மெட்ராஸ் புகழ் நந்து, நாஞ்சில் விஜயன், க்ரிஷ், மடிப்பாக்கம் சுரேஷ், ராதா, நடன இயக்குநர் சிவசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சாலைப் பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை எழுதி டைரக்ஷன் செய்துள்ளார் டாக்டர் மாறன். பாடல்களை பழனிபாரதி, விஜய்சாகர், டாக்டர் மாறன், டாக்டர் கிருதயா ஆகியோர் எழுத, சிவசங்கர், சந்திரிக்கா புஜிதோஷ் இருவரும் நடனம் அமைத்துள் ளார். எஸ்.வி. பாலாஜி ஒளிப் பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். டேஞ்சர் மணி சண்டைப்பயிற்சி அளிக்க, கே. நடராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

Advertisment

படத்தின் பெரும் பகுதி காட்சிகள் சென்னை அருகே உள்ள பிரபலமான பல்கலைக் கழகத்திலும், திருப்போரூர், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் படமாக்கப்பட்டுள்ளன.

டிஜி திங் மீடியா நிறுவனம் சார்பில் டாக்டர் சி. மணிமேகலை தயாரிக்கும் இந்தப் படத்தின் படப் பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

""சின்னப்படங்கள் ரிலீசாவது பெரும்பாடா இருக்கே, இந்தப் படம் எப்படி?'' என டைரக்டர் மாறனிடம் கேட்டோம்.

(அவர் சொன்ன அதிர்ச்சி பதில் வரும் இதழில்...)