Advertisment

பேரன்பு பெரிய ஹேப்பி!

/idhalgal/cinikkuttu/greater-greetings

ரண்டு வருஷத்துக்கு ஒருமுறையோ, மூணு வருஷத் துக்கு ஒரு முறையோதான் படம் தயாரிப்பார். அந்தப் படமும் ஏதாவது சிக்கலில் மாட்டும்; இல்லேன்னா இவரே மாட்டிக்குவார். ""அடச்சே! என்ன பய பொழப்பு இது'' என சலிப்பாவார். மீண்டும் படம் தயாரிப்பார், மீண்டும் சலிப்பாவார். இப்படி எல்லா "பார்'களுக்கும், "வார்'களுக்கும் சொந்தக்காரர்

ரண்டு வருஷத்துக்கு ஒருமுறையோ, மூணு வருஷத் துக்கு ஒரு முறையோதான் படம் தயாரிப்பார். அந்தப் படமும் ஏதாவது சிக்கலில் மாட்டும்; இல்லேன்னா இவரே மாட்டிக்குவார். ""அடச்சே! என்ன பய பொழப்பு இது'' என சலிப்பாவார். மீண்டும் படம் தயாரிப்பார், மீண்டும் சலிப்பாவார். இப்படி எல்லா "பார்'களுக்கும், "வார்'களுக்கும் சொந்தக்காரர் ஸ்ரீராஜலட்சுமி பிக்சர்ஸ்(பி) லிமிடெட்டின் உரிமையாளரான பி.எல். தேனப்பன்.

Advertisment

peranbu

பாலாவின் டைரக்ஷனில் "நான் கடவுள்' படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தவரே தேனப்பன்தான். படத்தின் ஆரம்பத்தில் வரும் 12 நிமிட காட்சிகளுக்கான பட்ஜெட்டைப் பார்த்து கதிகலங்கிப் போய், வாசன் பிக்சர்ஸிடம் "நான் கடவுளை' கைமாற்றிவிட்டு, "நல்ல வேளை! கடவுள் நம்மைக் காப்பாற்றிவிட்டார், என நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். சிம்புவின் ஆக்ஷன் மற்றும் டைரக்ஷனில் "வல்லவன்' படத்தை எடுத்து முடிப்பதற்குள் தேனப்பனுக்கு தாவு தீர்ந்துவிட்டது. கொஞ்ச வருஷம் கேப்விட்டு, ஆதியை வச்சு ஒருபடம் (பேர்கூட நமக்கு ஞாபகத்துக்கு வரல) எடுத்தார். தமிழ்நாடு முழுக்க மொத்தமே 50 ஷோ ஓடியிருந்தாலும் ஆச்சர்யம்தான்.

இப்போது ராம் டைரக்ஷனில் ரிலீசாகியிருக்கும் "பேரன்பு'கூட மூணு வருஷம் தயாரிப்பில் இருந்துச்சு, ஒரு வருஷத்துக்கும். மேல உலகப் படவிழாக்களில் சுத்திக்கிட்டிருந்துச்சு. ஒருவழியா பொதுமக்கள் பார்வைக்கு படம் ரிலீசாச்சு. வியாபாரமும் டல்லா இருந்ததால, போட்ட காசு திரும்பு மான்னு திகைச்சுக் கிட்டிருந்த தேனப்பனுக்கு, படத்தின் கலெக்ஷன் தித்திப்பா இருக்காம். பேரன்பால் பெரிய ஹேப்பியாம்.

பேரன்பின் வெற்றியை, மம்முட்டி மலையாளத்தில் நடிக்கும் "மதுரரஜா' ஷூட்டிங் ஸ்பாட்டில், கேக் வெட்டிக் கொண்டாடினார் தேனப்பன். மோகன்லாலை வைத்து "புலிமுருகன்' படத்தை எடுத்த வைசாக்தான் "மதுரராஜா'-வின் டைரக்டராம்.

Advertisment

cine260219
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe