Advertisment

பெரும் பாக்கியம் -"நக்கீரன்' ஆசிரியர் பெருமிதம்!

/idhalgal/cinikkuttu/great-privilege-nakkheeran-editor-excited

ரோடு மாவட்டத்தில் இயங் கிவரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி அறிமுகம் செய்தது.

Advertisment

dd

"கிட்ஸ் நியூஸ்' மற்றும் "அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி' என்ற இரு புதிய முயற்சிகளை, உலக மேடையில் புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கிவைத் தார். அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாண வர்களுடன் உரையா

ரோடு மாவட்டத்தில் இயங் கிவரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6-ஆம் தேதி அறிமுகம் செய்தது.

Advertisment

dd

"கிட்ஸ் நியூஸ்' மற்றும் "அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி' என்ற இரு புதிய முயற்சிகளை, உலக மேடையில் புகழ் பெற்ற லிடியன் நாதஸ்வரம் துவங்கிவைத் தார். அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து, லிடியன் நாதஸ்வரம் பள்ளி மாண வர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விக்கு அற்புதமாக பதில் அளித்தார். பின்னர், மாணவர்கள் முன்னிலையில் பியானோ வாசித்துக் காண்பித்து உற்சாகப் படுத்தினார். மேலும், லிடியனின் சகோதரி அமிர்த வர்ஷினி பாட்டு பாடி அசத்தினார். எஸ்.பி. ஜனநாதன் டைரக்ஷனில், விஜய்சேதுபதி நடித்த "புறம்போக்கு' படத்தின் இசையமைப்பாளர் வர்ஷனின் குழந்தை கள்தான் விடியனும் அமிர்தவர்ஷினியும்.

Advertisment

"அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட் டோகிராபி' என்ற சர்வதேச தரத்திலான புதிய முயற்சியை பிரபல ஓவியரான ஏ.பி. ஸ்ரீதர் வடிவமைத்திருக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்கள், ஓவியர் கள் சிறப்பு விருந்தினர் களாகக் கலந்து கொண்டனர், மேலும், "நக்கீரன்' ஆசிரியர் திரு. நக்கீரன்கோபால் அவர்களும் கலந்துக்கொண்டார்.

ss

நக்கீரன் ஆசிரியர் பேசும் போது, ""நான் புத்தகக் கண்காட் சிக்காக ஈரோடு வந்தேன்.

அப்போது தம்பி ஸ்ரீதர் என்னை அழைத்ததால் இங்கு வந்தேன். நான் இப்படிப்பட்ட மாணவர் களைப் பார்ப்பேன் என்று நினைக் கவில்லை, மிகவும் அருமையானவர்கள். நான் ஒரு சாதாரண பள்ளி, கல்லூரியில் படித்தேன். பின் பிழைப்புக்காக சென்னை வந்தேன். கற்பனை பண்ணாத அளவிற்கு இப்பள்ளியின் சுற்றுப்புறச் சூழல் அழகாக அமைந்திருப்பது பாராட்டுக் குரியது. நான் பெரிய பாக்கியமாக நினைப்பது குட்டிப் புலி லிடியன் அருகில் இருப்பதுதான். ஏனென்றால் 12 வயதில் உலக சாதனையும் பாராட்டுகளையும் சேர்ப்பது சாதாரணமல்ல. எதுவும் நம்மால் முடியும் என்பதற்கு லிடியன் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார். இவர் பியானோ வாசிப்பதில் ஒரு ஸ்டைல் உள்ளது. ஆனால், இப்போது மிகச் சாதாரணமாக அமர்ந்திருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்தது லிடியனின் தந்தை இவர்களுக்குத் தமிழ்ப் பெயர்களை வைத்திருப்பது. நானும் பிற்காலத்தில் இப்படிப்பட்ட பள்ளிக்கு வந்தேன் என்று பெருமைக்கூறி கொள்வேன்'' என்றார்.

இந்தியன் பப்ளிக் ஸ்கூல் நிர்வாக இயக்குநர் டாக்டர் சிவகுமார் மற்றும் கிருத்திகா சிவகுமார் இந்நிகழ்ச்சி ஏற்பாடு களை மிகவும் சிறப் பாகச் செய்திருந் தார்கள்.

cine200819
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe