உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா. இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றா கும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. ராய் லட்சுமி பிரதா
உலகம் முழுக்க உள்ள குழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட் ரல்லா. இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றா கும். அப்படிப்பட்ட சிண்ட் ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது. ராய் லட்சுமி பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி, ஹாரர் த்ரில்லர், எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது. படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவின் மாணவர் வினோ வெங்கடேஷ். படத்தைத் தயாரிப்பது எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ்.
படம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும்போது, ""இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல; பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும்.
படம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்புதான் எல்லாருக்கும் பிடித்தது. அதன்மீது ஈர்ப்புவந்தது. நடிகை ராய் லட்சுமிக்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம். பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரைமணி நேரம் கதை கேட்டார். நாங்கள் அனுப்பியிருந்த கதைச்சுருக்கம், குறிப்புகளைப் பார்த்துவிட்டு ஏற்கெனவே ஓர் இணக்கமான புரிதலோடுதான் இருந்தார். கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் கூறினார். மேலும் ஒரு வார அவகாசத்தில் சில விளக்கங்கள் கேட்டார்; தெளிவுபெற்றார். இப்போது முழுமையாக "சிண்ட் ரல்லா'-வுக்குள் புகுந்துவிட்டார்'' என்றார்.
ராய் லட்சுமி... நல்லா வருவீங்கம்மா நீங்க.