அவர்களிடம் போங்க -அமலாபால் கொதிப்பு!

/idhalgal/cinikkuttu/go-them-amalapal-boil

மலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "அதோ அந்த பறவை போல'. ஆக்‌ஷன், அட்வெஞ்சர் திரில்ல ராக உருவாகியிருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குநர் கே.ஆர். வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் எஸ்.வி. சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குநர் திருமலை ஆகியோர் கலந்துக

மலாபால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் "அதோ அந்த பறவை போல'. ஆக்‌ஷன், அட்வெஞ்சர் திரில்ல ராக உருவாகியிருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் கே.ஆர். வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் ஜோன்ஸ், நடிகை அமலாபால், இயக்குநர் கே.ஆர். வினோத் உள்ளிட்ட படக்குழுவினருடன் எஸ்.வி. சேகர், தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ், இயக்குநர் திருமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

aa

இவ்விழாவில் தயாரிப் பாளர் ஜோன்ஸ் பேசும்போது, ""பல படங்களை ஜான் மேக்ஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளேன். "மைனா' படத்தில் இருந்து அமலாபால் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்துவருகிறார். "அதோ அந்த பறவை போல' படத்தில் அவரின் அர்ப்பணிப்பு ரொம்ப உணர்வுப்பூர்வமானது'' என்றார்.

அமலாபால் பேசும்போது, ""இந்தப் படம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்தது. தயாரிப்பாளருக்கு கண்டிப்பா நல்ல லாபத்தைக் கொடுக்கும். காரணம் படத்தோட கதை. ஒரு இளம்பெண் எந்த உதவியுமே இல்லாம தனி ஆளா காட்டுல சிக்கிக்கிட்டபிறகு அதுலஇருந்து எப்படி வெளியில வர்றாங்கறதுதான் படம். இன்னிக்கு நாடு இருக்கற நிலையில... பெண்கள் பாதுகாப் புங்கறது எந்த அளவுக்கு இருக்குங்கிறதுதான் பெரிய விவாதமா இருக்கு. இந்தப் சூழ்நிலையில இப்படி ஒரு படம் வர்றது ஒட்டுமொத்த பெண்களுக்கான படமாக இருக்கும். இந்தப் படத்தோட டீம் பக்காவா திட்டமிட்டு உழைச்சாங்க. கதை சொல்லும் போதுகூட பக்கா பிளான் பண்ணித்தான் வந்திருந்தாங்க. இந்த படத்துக்காக புதுசா "கிராமகா' என்னும் தற்காப்புக் கலையை கத்துக்கிட்டேன். ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர்கூட ஒரு சண்டை போட்டுருக்கேன். அந்த சண்டை பெரிசா பேசப்படும். கதையாசிரியர் அருண் அவ்வளவு திறமையா இந்த கதையை எழுதி இருந்தாரு. படம் ஷூட் போறதுக்கு முன்னாடியே எனக்கான ஸ்டண்ட் காட்சிகளை ஷூட் பண்ணி டெமோ காட்டி எனக்கு நம்பிக்கை கொடுத்தாங்க. இயக்குநர் வினோத், நிர்வாகத் தயாரிப் பாளர் கவாஸ்கர், கதாசிரியர் அருண் இவர்கள் எல்லாம் பெரிய போராட்டத்தைச் சந்தித்து இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டத்திற்கு முன்னால் படத்தில் நான் பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமே இல்லை. எங்க டீமில் எல்லாரும் பெண்கள் பலத்தை உணர்ந்தவர்கள். தயாரிப்பாளர் ஜோன்ஸ் மைனாவில் இருந்தே நல்ல நண்பர். இந்தப் படத்திற்காக நான் கற்றுக்கொண்ட தற்காப்புக் கலை, எனக்கு நிஜ வாழ்க்கையிலும் ரொம்ப தைரியத்தைக் கொடுத் துள்ளது. கதை பிடித் திருந்தால் மட்டுமே படத்தில் நடிப்பேன். கதா நாயகர்களுடன் ஜோடிபோட்டு நடிக்க நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் அவர் களிடம் போங்க'' என்றார் ஆவேசமாக.

cini040220
இதையும் படியுங்கள்
Subscribe