Advertisment

க்ளாமர் நமீதாவின் "ஆக்ஷன்' பொங்கல்!

/idhalgal/cinikkuttu/glamor-namitas-action-pongal

ரத்குமார் நடித்த "சத்ரபதி' பட இயக்குநர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அகம்பாவம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் நமீதா நடித்துள்ளார், கதையை எழுதி தயாரித்துள்ள வாராகி வில்லனாகவும் சாதிக்கட்சி தலைவராகவும் நடித்துள்ளார், மனோபாலா, அப்புக்குட்டி "நாடேடிகள்' கோபால் ஆகியோர் நடித்துள்ளனர், ஒள

ரத்குமார் நடித்த "சத்ரபதி' பட இயக்குநர் ஸ்ரீமகேஷ் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அகம்பாவம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக்கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் நமீதா நடித்துள்ளார், கதையை எழுதி தயாரித்துள்ள வாராகி வில்லனாகவும் சாதிக்கட்சி தலைவராகவும் நடித்துள்ளார், மனோபாலா, அப்புக்குட்டி "நாடேடிகள்' கோபால் ஆகியோர் நடித்துள்ளனர், ஒளிப்பதிவு ஜெகதீஸ்விஸ்வம், "கோலிசோடா' பட இசையமைப்பாளர் அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எடிட் டிங் சின்னுசத்தீஸ், மக்கள் தொடர்பு சரவணன் என்று களைகட்டும் "அகம்பாவம்' இரவு ஷூட்டிங் ஸ்பாட்டில் நாயகி நமீதாவை சந்தித்தோம்.

Advertisment

nameetha

இப்படத்தை பத்தி என்ன சொல்ல வர்றீங்க?

ஹீரோயினை மையமாகக் கொண்டு நான் நடிக்கும் முதல் படம் இது, மிகவும் மகிழ்ச்சி.

Advertisment

இப்படத்தில் உங்கள் கதாபாத்திரத்தைப் பற்றி..?

இப்படத்தில் முதன்முறையாக பத்திரிகையாளராக நடிக்கிறேன். மீடியா பவர் பற்றி வெளியிலிருந்து பார்த்துள்ளேன் அதே கதாபாத்திரமாக நடிக்கும் போது மனநிறைவு. அதேபோல சமுதாயத்தில் நடக்கும் அவலத்தை தைரியமாகத் தட்டிக்கேட்கும் படம் இது.

nameetha

படத்தில் சண்டைக் காட்சியில் நடிக்கப் பயிற்சி எடுத்து வருகிறீர்களாமே..?

ஆமாம். கடந்த இரண்டு மாதமாக பயிற்சி எடுத்து வருகிறேன். சாதாரண தற்காப்புக் கலைதான். குழந்தை யாக இருந்தபோது தரையில் பல குட்டிக்கரணம் அடித்துள் ளேன். ஆனால் இப்போது அதைச் செய்வது மட்டும் கடினமாக உள்ளது, மற்றபடி எளிய பயிற்சிகள்தான்.

"அகம்பாவம்' படக்குழு பற்றி.?

எல்லாரும் நட்பாக, குடும்பமாக இருந்து கடந்த 50 நாட்கள் படப்பிடிப்பை முடித்துவிட்டோம் இந்த டீமைப் பொருத்தவரை தயாரிப்பாளர் வாராகி, டைரக்டர் ஸ்ரீ மகேஷ் மற்றும் படக்குழுவினர் எளிமையாகவே உள்ளனர். திரையரங்கில் பார்க்கவும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். இதுவரை கிளாமர் வேடத்தில் பார்த்த நமீதாவை ஆக்ஷன் நமீதாவாக பார்பீர்கள். இந்த படம் என் சினிமா வாழ்வில் அடுத்த லெவல்.

cine220119
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe