Advertisment

ஜிப்ரானுக்கு விருது!

/idhalgal/cinikkuttu/gibrans-award

ர் இசையமைப்பாளருக்கு எவ்வளவுதான் வாய்மொழிப் பாராட்டுகள் குவிந்தாலும், அவரது தலைசிறந்த படைப்புகளும், ரீ மிக்ஸ்களும் அனைத்து பொழுது போக்குத் தளங்களிலும் பரபரப்பான வரவேற்பைப் பெறும்போதுதான், அ

ர் இசையமைப்பாளருக்கு எவ்வளவுதான் வாய்மொழிப் பாராட்டுகள் குவிந்தாலும், அவரது தலைசிறந்த படைப்புகளும், ரீ மிக்ஸ்களும் அனைத்து பொழுது போக்குத் தளங்களிலும் பரபரப்பான வரவேற்பைப் பெறும்போதுதான், அவர் மறுக்கமுடியாத வெற்றி யாளராக அங்கீகாரம் பெறுகிறார்.

Advertisment

bb

"ராட்சசன்' படத்துக்காக இசை யமைப்பாளர் ஜிப்ரான் உருவாக்கிய இசைக்கோர்வைகள், மற்றும் பின்னணி இசை யூ ட்யூப் மற்றும் பல்வேறு இசைத்தளங்களில் திரும்பத் திரும்பப் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன. ஜிப்ரான் தொடர்ந்து பல்வேறு சர்வதேச படவிழாக்களில் விருதுகளை வென்று வருகிறார். "ராட்சசன்' படத்துக்காக "பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர்' விருது ஜிப்ரானுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. கிழக்கு ஐரோப்பிய சர்வதேசத் திரைப்பட விழாவின் ஓர் அங்கமான ஃபியூஸன் சர்வதேசத் திரைப்பட விழா வார்ஸோவில் நடந்தபோது, பல்வேறு நாடுகளில் இருந்துவந்த ஏராளமான படங்கள் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன. இந்தக் கடும் போட்டியில் ஜிப்ரன் இசையமைத்த "ராட்சசன்' படம் 2019-ஆம் ஆண்டுக்கான "பெஸ்ட் ஒரிஜினல் ஸ்கோர்' விருதை வென்றிருக்கிறது.

cini241219
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe