Advertisment

கௌதம் மேனனின் கள்ளத்தனம்!

/idhalgal/cinikkuttu/gautham-menons-scarcity

டைரக்டர் கௌதம் மேனன், சிம்பு- த்ரிஷா கூட்டணியில் செம கிளாஸ், மாஸ் ஹிட் அடித்த படம் "விண்ணைத் தாண்டி வருவாயா.' இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறார் கௌதம். ஆனால் முதல் பாகத்தில் இருந்த சிம்புவுக்குப் பதிலாக, இரண்டாம் பாகத்தில் மாதவனை கமிட் பண்ணியிருப்பதாக கோலிவுட் ஏரியாவில் பரபர தகவல் பரவியது. மணிரத்னத்தின் "செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு கமிட் ஆகியிருக்கும் சிம்பு, கௌதம் மேனனின் இந்த முடிவால் ரொம்பவே

டைரக்டர் கௌதம் மேனன், சிம்பு- த்ரிஷா கூட்டணியில் செம கிளாஸ், மாஸ் ஹிட் அடித்த படம் "விண்ணைத் தாண்டி வருவாயா.' இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறார் கௌதம். ஆனால் முதல் பாகத்தில் இருந்த சிம்புவுக்குப் பதிலாக, இரண்டாம் பாகத்தில் மாதவனை கமிட் பண்ணியிருப்பதாக கோலிவுட் ஏரியாவில் பரபர தகவல் பரவியது. மணிரத்னத்தின் "செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு கமிட் ஆகியிருக்கும் சிம்பு, கௌதம் மேனனின் இந்த முடிவால் ரொம்பவே நொந்துவிட்டதாகவும் அடிஷனல் பரபரப்பும் கிளம்பியது.

Advertisment

gowtham-menon

என்னடா இது சிம்புக்கு வந்த சோதனை என நினைச்சுக்கிட்டே, கோலிவுட் புள்ளிகள் சிலருக்குத் தூண்டில் போட்டோம். ""இன்னைக்கு இருக்கிற ஹீரோக்கள்ல ஷூட்டிங்கிற்கு வராம சொதப்பி, புரொடியூசர் களை சாகடிப்பதில் சிம்புதான் ஃபர்ஸ்ட். "செக்கச் சிவந்த வானத்'தால மணிரத்னம் என்னபாடுபடப் போறாரோ, ஆண்டவனுக்குத்தான் தெரியும். "சரிங்க' சிம்புவைப் பத்தியே நொட்டை சொல்லிலிக்கிட்டிருந்தா?'ன்னு ஒங்க மைண்ட் வாய்ஸ் கேக்கத்தான் செய்யுது.

simbu0trisha

அதனால கௌதம் மேனனின் சேட்டையையும் கள்ளத்தனத்தையும் சொல்ல வர்றேன்.

Advertisment

madavan

கௌதம் மேனனின் "விண்ணைத் தாண்டி வருவாயா' செம மாஸ் படம்தான். இல்லேங்கல. ஆனா கௌதம் தயாரிச்ச பல படங்கள் ஊத்தி மூடினதால ஏகப்பட்ட கடன் நொம்பலத்துல இருக்காரு. இதுமட்டுமா; விஜய்யை வச்சு ஒரு படத்துக்குப் பூஜை போட்டு, பேப்பரில் விளம்பரமெல்லாம் கொடுத் தாரு கௌதம். அத்தோட அந்தப் படம் நின்னுபோச்சு. அதுக்குப்பிறகு சூர்யாவை கமிட் பண்ணி அதுவும் நின்னுபோச்சு.

இப்ப தனுஷை வைத்து "என்னை நோக்கிப் பாயும் தோட்டா', விக்ரமை வைத்து "துருவநட்சத்திரம்' அப்படின்னு ரெண்டு படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிக் கிட்டிருக்காரு. இதுல எந்தப்படம் மொதல்ல ரிலீஸ் ஆகும்னு கௌதமுக்கும் தெரியாது, ரெண்டு பட ஹீரோக்களுக்கும் தெரியாது. அதைவிட என்னன்னா, விக்ரமுக்கு இப்ப இருக்குற மார்க்கெட் வேல்யூப்படி, கௌதமின் பட்ஜெட்டுக்கு படம் விலைபோகுமான்னும் தெரியாது.

இப்படி எல்லாத்துக் கும் நெருக்கடி, கழுத்துப் பிடி கடன் பிரச்சினைக்குத் தற்காலிக ரிலீஃபுக்காகத்தான் "விண்ணைத் தாண்டி வருவாயா-2', மாதவன் அப்படின்னு கௌப்பி விட்ருக் காரு கௌதம். சிம்புவும் சரி, கௌதம் மேனனும் சரி, ரெண்டுபேருமே ஜாடிக்கேத்த மூடிகள்தான்.

அம்புட்டுத்தான் நம்மால சொல்ல முடியும். ஸ்ரீதேவியோட இறுதி ஊர்வலத்துல கலந்துக்கப் போறேன், மும்பை பிளைட்டுக்கு டைமாயிருச்சு, நான் கௌம்பட்டுமா'' எனச் சொல்லிலிக் கிட்டே விருட்டுன்னு கிளம்பிப் போய்ட்டாரு.

-ஈ.பா. பரமேஷ்வரன்

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe