Advertisment

அ.தி.மு.க.வில் கஞ்சா கருப்பு! -அலறும் மாஜி மேனேஜர்!

/idhalgal/cinikkuttu/ganja-karuppu-aiadmk-and-magic-manager

சினிமா மார்க்கெட்டில் ஓஹோ வென உச்சத்தில் இருந்தவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் விஷய ஞானத்தால் முன்னுக்கு வந்தவர். கருப்புவின் உழைப்பைப் பார்த்தும் வளர்ச்சியைப் பார்த்தும் அவரைத் திருமணம் செய்து கொண்டார், அவரது உறவுக் கார டாக்டர் ஒருவர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதற்கேற்ப, மனைவி வந்த நேரம் ரொம்பவே பிஸியானார் கஞ்சா கருப்பு.

Advertism

சினிமா மார்க்கெட்டில் ஓஹோ வென உச்சத்தில் இருந்தவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. எழுதப்படிக்கத் தெரியாவிட்டாலும் விஷய ஞானத்தால் முன்னுக்கு வந்தவர். கருப்புவின் உழைப்பைப் பார்த்தும் வளர்ச்சியைப் பார்த்தும் அவரைத் திருமணம் செய்து கொண்டார், அவரது உறவுக் கார டாக்டர் ஒருவர். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதற்கேற்ப, மனைவி வந்த நேரம் ரொம்பவே பிஸியானார் கஞ்சா கருப்பு.

Advertisment

கையில் இருந்த ரொக்கத்துடன் வங்கியிலும் லோன் வாங்கி, சென்னை வளசரவாக்கத்தில் வீடு கட்டி முடித்து, "பாலா-அமீர் இல்லம்' என பெயரும் சூட்டினார். பிஸியாக இருந்த நேரத்தில், அப்போது அவரிடம் மேனேஜராக இருந்தவரி டம் மொத்தமாக பல செக்குகளில் கையெழுத் துப் போட்டுக் கொடுத்துவிடுவாராம்.

Advertisment

ஆனால் மேனேஜரோ, கஞ்சா கருப்புவின் பேங்க் லோனுக்கு தவணை கட்டாமல் டிமிக்கி கொடுத்துவிட்டு, தனது பெயரில் பலப்பல லட்சங்களுக்கு சொத்துகளை வாங்கிக் குவித்துவிட்டார்.

ganjakaruppu

இதற்கிடையில் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையா, "வேல்முருகன் போர்வெல்' அப்படிங்கிற படத்தை சொந்தமா தயாரித்தார் கஞ்சா கருப்பு. படமோ செம ஊத்தலாகி சில கோடிகளுக்கு கடனாளியானார் கருப்பு. அந்த நேரத்தில் பேங்கில் இருந்து வீடு ஏல நோட்டீஸ் வர, நொந்து நொம்பலாகி கணக்கு வழக்குகளைப் பார்த்தபோது தான், மேனேஜர் ஆட்டையப் போட்ட சமாச்சாரம் தெரிந்துள்ளது.

அதன்பின் வங்கி அதிகாரிகளிடம் கெஞ்சிக் கூத்தாடி, வட்டியைக் குறைத்து வீடு ஏலத்துக்குப் போகாமல் தடுத்து நிம்மதியடைந்திருக்கிறார் கருப்பு. இப்போதும் பண நெருக்கடி அவரைத் துரத்துவதால் தான் முதல்வர் எடப்பாடி முன்னிலை யில் அ.தி.மு.க.வில் இணைந்து ஆசுவாசமாகியிருக்கிறார். எடப்பாடி தரப்பிலிருந்து சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டதால், கருப்புவின் முகத்தில் சிரிப்பு.

சமீபத்தில் கஞ்சா கருப்புவிடம் பேசிய அவரது நலன் விரும்பிகள், ""அண்ணே நம்மகூட இருந்தே குடியைக் கெடுத்த அந்த மேனேஜரை சும்மாவிடக்கூடாது. நாம எவ்வளவு நொம்பலப்பட்டிருப்போம். ஆனா அவன் மட்டும் பகுமானமா இருக்கலாமா? சி.எம்.கிட்ட பேசவேண்டிய விதத்துல பேசி, அந்த மேனேஜர் ஆட்டையப் போட்டதையெல்லாம் பிடுங்கிட்டு, அவனையும் புழல் ஜெயிலுக்கு அனுப்பணும்'' எனச் சொல்லி வருகிறார்களாம்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

cine251218
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe