""பிக்பாஸ்-2-விற்குள் போகலாயா''ன்னு கேட்டா, ""அட ஏன் பாஸ் அதப்போயி ஞாபகப்படுத்திக்கிட்டு'' என சட்டுன்னு சொல்லிலிடுறாரு கஞ்சா கருப்பு. ""சீனு ராமசாமி அண்ணே டைரக்ஷன்ல, உதயநிதி அண்ணே நடிக்கிற "கண்ணே கலைமானே' படத்துக்கு மொதல்ல என்கிட்டதான் கேட்டாக, நானும் சரின்னுட்டேன். ஆனா பாருங்க,

Advertisment

kanchakaruppu

கடைசி நேரத்துல சம்பளத்த சடக்குன்னு கொறச்சுப்புட்டாக. எதுக்கு பொல்லாப்புன்னு வேண்டாம்னுட்டேன். இப்ப "நெருப்போடு விளையாடு', "பீஷ்மா' படங்கள்ல நடிச்சுக்கிட்டிருக்கேன்.

Advertisment

எங்கூட சேர்ந்து காமெடி பண்றது "காதல்' சுகுமாரும் நம்ம பங்காளி ஜெயங்கொண்டானும்தான். இந்த ஜெயங்கொண்டான் யாருன்னு கேக்குறீகளா? நம்ம சென்னை கே.கே. நகர்ல "கவிஞர் கிச்சன்'னு வச்சிருந்த பார்ட்டிதான் பங்காளி ஜெயங்கொண்டான். எலெக்ஷன்ல ஜெயங்கொண்டம் தொகுதியில நின்னு தோத்தவருதான் இவரு. சினிமாவுக்கு பாட்டெழுதும் கவிஞர்கள் நடிக்க வர்ற வரிசையில பங்காளியும் வந்திருக்காப்ல. நல்லா வளரட்டும்னு வாழ்த்தி நல்லபடியா எழுதுங்கண்ணே, பய பொழச்சுக்குவான்'' என்றார் வெள்ளந்தியாய்.

வாழ்க வளமுடன்னு நாமும் வாழ்த்தினோம்.