Advertisment

வாரிசுகளின் ஆட்டம்! - 3 "அப்பாவிடம் கற்றுக்கொள்''

/idhalgal/cinikkuttu/game-heirs-3-teach-dad

காமெடி நடிகர் மயில்சாமியின் மூத்தமகன் அன்பு "அல்டி' படம்மூலம் ஹீரோவாகிறார்.

அப்படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழா வில் பேசிய பிரபலங்கள்...

Advertisment

vv

டத்தோ ராதாரவி

சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம்தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியதுமுதல் இன்றுவரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய் சேதுபதியைப் பாராட்டுகிறேன்.

சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்

காமெடி நடிகர் மயில்சாமியின் மூத்தமகன் அன்பு "அல்டி' படம்மூலம் ஹீரோவாகிறார்.

அப்படத்தின் ஆடியோ & டிரைலர் வெளியீட்டு விழா வில் பேசிய பிரபலங்கள்...

Advertisment

vv

டத்தோ ராதாரவி

சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம்தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியதுமுதல் இன்றுவரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய் சேதுபதியைப் பாராட்டுகிறேன்.

சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த "ஒத்த செருப்பு' படத்தைத் திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசி யில் அழைத்து வாழ்த்தினேன். திரை யரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். பார்க்கப் பார்க்கதான் மக்களுக்கு படம் பிடிக் கும்.

Advertisment

சிறு படங்கள் குறைந்தது ஐந்து நாட்களாவது திரையரங்கில் ஒளிபரப்ப வேண்டும். அன்பு மயில்சாமிக்கு, உங்கள் தந்தை மயில்சாமிபோல் நட்பைப் பாதுகாத்து நல்ல பண்புகளோடு இருக்கவேண்டும்.

இயக்குநர் பாக்யராஜ்

"தாவணி கனவுகள்' படத்தில்தான் மயில்சாமி அறிமுகமானார். முதல் படத்தில் ஏழு டேக் வாங்கித்தான் நடித்தார். அப்படிப்பட்ட மயில்சாமியா இவர் என்று இன்று வியந்து பார்க்கிறேன். அவருடைய மகன்களுக்கு ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களோ இல்லையோ- உங்கள் அப்பா மயில்சாமிமாதிரி நல்ல குணங் களோடு இருக்கவேண்டும்.

vv

விஜய்சேதுபதி

மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி; பல காட்சி களில் வந்தாலும் சரி- அவருக் கென்று ஒரு பாணி இருக்கும். அதே போல் பேச்சிலும், நடிப்பிலும் தேவை யில்லாமல் எதையும் செய்யமாட்டார். மிகப்பெரிய ஜாம்பவான்களிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டுமென்று கூறுவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பா விடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. அதைக் கற்றுக்கொண்டு அன்பு மயில்சாமி வெற்றியடையவேண்டும்.

மயில்சாமி

இவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர் களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி. எனது இரு மகன்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகனின் பொறுமையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். பத்து படத்தில் நடித்திருந்தாலும்' இந்த படத்தில்தான் முதன்முறையாக இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கி றான்.

ஹீரோ அன்பு மயில்சாமிக்கு "அல்டி'-யில் ஜோடி போட்டிருக்கி றார் மனிஷா ஜித்.

cini051119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe