தூத்துக்குடிக்குப்போன ரஜினி, அங்கே கொடுத்த சர்ச்சை பேட்டியால், தமிழக அரசியலிலில் அனல் அடித்தது. அந்த அனலுக்குப் பின் "காலா' ரிலீசாகியிருப்பதால், எதிர்ப்பும் சர்ச்சையும் சுழன்றடித்தாலும் "காலா' ரிலீசை கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்.

kalla-rajini

"கபாலி'-யில் ரஜினியை முற்றிலும் வேறொரு கோணத்தில் காட்டிய டைரக்டர் பா. இரஞ்சித், "காலா'-வில் இன்னும் உயர்த்திக் காட்டியிருக்கிறார். மனைவி, நான்கு மகன்களுடன் மும்பை தாராவியின் தாதாவாக இருக்கிறார் ரஜினி. சேரி மக்கள் வாழும் குடிசைப் பகுதியான தாராவியை கபளீகரம் செய்ய தூய்மை மும்பை ஆக்கும் திட்டத்தோடு களம் இறங்குகிறார் வில்லன் நானா படேகர்.

சேரி மக்களின் ஆபத்பாந்தவனாக களம் இறங்குகிறார் "காலா' என்கிற கரிகாலன். குடிசையை அழிக்க நினைக்கும் வில்லனுக்கு கடைசி வரை சிம்ம சொப்பனமாக இருக்கிறார் "காலா' ரஜினி.

Advertisment

ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ், மாஜி காதலியாக ஹூமா குரோஷி, ரஜினியின் மச்சானாக டைரக்டர் சமுத்திரக்கனி, மகன்களாக நித்திஷ், திலீப், மணிகண்டன், மருமகள்களாக அஞ்சலிலி பாட்டீல், சாக்ஷி அகர்வால், சின்ன வில்லன்களாக சம்பத்ராஜ், ரவிகாலா என பெரிய நட்சத்திரப்பட்டாளமே படத்தில் இருக்கிறது.

படத்தின் முதல் பாதி, மெதுவாக நகரும் டாக்குமென்ட்ரிபோல இருந்தாலும், கதையின் வெயிட்டேஜை அதிகரித்துக்கொண்டே போகிறது. இடைவேளைக்குப் பின்தான் படம் செம ஸ்பீடு. ரஜினி வரும் காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் தியேட்டரில் விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. அதிலும் சரக்கைப் போட்டுவிட்டு, போலீஸ் ஸ்டேஷன் விசாரணையின்போது, ""ஆமா இவரு யாரு'' என திரும்பத் திரும்ப மந்திரியைப் பார்த்து ரஜினி கேட்பது, அக்மார்க் ரஜினி பிராண்ட்.

வில்லன் நானா படேகர் வீட்டுக்குச் சென்று தில்லாகப் பேசிவிட்டு, ""முடிஞ்சா என்னோட முதுகுல குத்திக்கோ'' எனச் சொல்லிலிவிட்டு, கெத்தாக நடந்துவருகிறாரே ரஜினி, செம சீன்பா அது. மியூஸிக் டைரக்டர் சந்தோஷ் நாராயணன், கேமராமேன் முரளி.

Advertisment

kalla-fans

ஜி., ஆர்ட் டைரக்டர் த. இராமலிலிங்கம், எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், சவுண்ட் டிசைனர் ஆண்டனி ரூபன், பாடலாசிரியர்கள் கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ், அறிவு, டான்ஸ் மாஸ்டர்கள் பிருந்தா, சாண்டி ஆகியோர் டைரக்டர் ரஞ்சித்துக்கு எல்லா வழிகளிலும் ஒத்துழைத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

""நிலம் எங்கள் உரிமை'' ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தக் குரலை ரஜினி மூலமாக கேட்க வைத்திருக்கிறார் ரஜினி. "கபாலிலி' படம் ரஜினி பாதி, ரஞ்சித் மீதி. "காலா' முழுக்க முழுக்க ரஞ்சித் படம் என்றாலும் ரஜினி எனும் மகாநடிகன் விஸ்வரூபமெடுத்திருக்கிறான்.

-பரமேஷ்

படங்கள்: அசோக்