Advertisment

இந்திய சினிமாவுக்கு வளமான எதிர்காலம் -தியேட்டர் அதிபரின் நம்பிக்கை!

/idhalgal/cinikkuttu/future-indian-cinema-theater-president-believes

தராபாத்தில் டிசம்பர் 1-ஆம் தேதிமுதலில் 5-ஆம் தேதிவரை "இன்டிவுட்' திரைப்பட விழா பிரம்மாண்டமாக நடக்கிறது. இதுகுறித்து sakshiagarwalஅந்த விழாவை நடத்தும் ஏரீஸ் குழும சி.இ.ஓவும், விழாத் தலைவருமான சோஹன்ராய்- ""நான் கேரளாவில் பிறந்து வளர்ந்து, அரபு நாடுகளில் பிஸினஸ் செய்துவருகிறேன். சினிமாமீது அபரீதக் காதல் கொண்டவன். சில படங்களை இயக்கியிருக்கிறேன். கேரளத்தில் அதிநவீன தியேட்டர் நடத்துகிறேன். இப்போது சில படங்களைத் தயாரித்து, இயக்கி வருகிறேன். உலகளவில் சினிமாத்துறை ஆண்டுக்காண்டு வளர்ந்துவருகிறது. இந்தியாவுக்கு சினிமா வந்து 105 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் 2

தராபாத்தில் டிசம்பர் 1-ஆம் தேதிமுதலில் 5-ஆம் தேதிவரை "இன்டிவுட்' திரைப்பட விழா பிரம்மாண்டமாக நடக்கிறது. இதுகுறித்து sakshiagarwalஅந்த விழாவை நடத்தும் ஏரீஸ் குழும சி.இ.ஓவும், விழாத் தலைவருமான சோஹன்ராய்- ""நான் கேரளாவில் பிறந்து வளர்ந்து, அரபு நாடுகளில் பிஸினஸ் செய்துவருகிறேன். சினிமாமீது அபரீதக் காதல் கொண்டவன். சில படங்களை இயக்கியிருக்கிறேன். கேரளத்தில் அதிநவீன தியேட்டர் நடத்துகிறேன். இப்போது சில படங்களைத் தயாரித்து, இயக்கி வருகிறேன். உலகளவில் சினிமாத்துறை ஆண்டுக்காண்டு வளர்ந்துவருகிறது. இந்தியாவுக்கு சினிமா வந்து 105 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தியாவில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் 20 மொழிகளில் படங்கள் தயாராகிவருகின்றன.

Advertisment

subskhiaஆனால் வெளியாகும் தியேட்டர்கள் குறைவு, பிஸினசும் குறைவு. பக்கத்து நாடான சீனாவில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தியேட்டர்கள் இருக்கின்றன. சின்ன பட்ஜெட்டில் தயாராகும் சீனப் படங்கள் உலகம் முழுவதும் வெளியாகி பல கோடி வசூலை ஈட்டுகின்றன. அதற்கான மார்க்கெட்டை அவர்கள் அமைத்துவிட்டார்கள். இந்திய படங்கள் இப்போதுதான் சீனாவில் தங்கள் பிஸினசைத் தொடங்குகின்றன. குறிப்பாக அமீர்கானின் "தங்கல்', "பாகுபலி' ஆகிய படங்கள் சீனாவில் பல நூறுகோடி வசூலை ஈட்டி ஆச்சரியப்பட வைத்தன. சீனா மட்டுமல்ல; உலகில் பல நாடுகளிலும் நம் சினிமாத்துறை விரிவடைய வேண்டும். சினிமாத்துறையின் பிஸினஸ் பல மடங்கு அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் "இன்டிவுட்' திரைப்படவிழா நடக்கிறது. 4-ஆவது ஆண்டாக இந்த விழாவை நடத்துகிறோம்.

இந்த விழா ஐதராபாத்தில் ராமோஜிராவ் திரைப்பட நகரிலுள்ள ஹைடெக் சிட்டியில் நடக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படுகின்றன. 20-க்கும் அதிகமான சினிமா பிஸினஸ் தொடர்பான நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், கண்காட்சிகள் நடக்கின்றன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பல்வேறு துறைகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், சர்வதேச முதலீட்டாளர்கள், நூற்றுக்கணக்கான சினிமாத்துறையினர், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள், பார்வையாளர்கள், திரைப்படக் கல்லூரி மாணவர்கள் என 25 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

soharai

Advertisment

இந்த திரைப்படவிழாவில், இந்திய சினிமாத்துறை சந்திக்கும் எதிர்கால திட்டம், முதலீடு செய்யப்பட வேண்டிய துறைகள், சினிமா சவுண்டு, தியேட்டர் நவீனம், உலகமயமாக்கப்பட்ட வியாபாரம், முதலீட்டாளர்கள் சந்திப்பு, ஆராய்ச்சி மாநாடு, ஆலோசனைக் கூட்டங்கள், முன்னணி சினிமா நிறுவனங்கள் பங்கேற்கும் ஸ்டால்கள், பிலிம் டூரிசம், பிலிலிம்சிட்டி தொடர்பான விவாதம் என பல விஷயங்கள் இடம்பெறுகின்றன. இந்திய சினிமாத் துறை வளர்ச்சிக்கு இந்த விழா, ஒரு முக்கிய விஷயமாக அமையும். இந்த வளர்ச்சிக்கு நம் தியேட்டர்களை நவீனப் படுத்தவேண்டும். சினிமா குவாலிட்டியை உயர்த்த வேண்டும். புது டெக்னாலாஜியைப் புகுத்த வேண்டும். இதற்கான அடித்தளமாகவும், புதுத் திறமைகளைக் கண்டுபிடிக்கவும் இந்த விழா உதவும். இந்திய சினிமாத்துறைக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்பதை முதலீட்டாளர் களுக்கு உணர்த்துவதுதான் இந்த விழாவின் முக்கிய நோக்கம்'' என்றார் பெருமை பொங்க.

""சோஹன்ராய் ஃபோட்டோ மட்டும் வச்சா லே-அவுட் ட்ரையா இருக்கும். அதனால ஹீரோயின்களின் லேட்டஸ்ட் ஃபோட்டோவ வச்சா இந்த மேட்டருக்கு சூப்பர் அட்ராக்ஷன் கிடைக்கும்'' இப்படியெல்லாம் நம்ம லே-அவுட் ஆர்டிஸ்ட் ஃபீல் பண்ணக்கூடாதுன்னு தான் ஐஸ்வர்யா மேனன், "கோலிசோடா-2' சுபிக்ஷா, சாக்ஷி அகர்வால், ஸ்டில்ஸ் களை இங்கே ஓ.கே. பண்ணிருக்கோம்.

cine041218
இதையும் படியுங்கள்
Subscribe