Advertisment
/idhalgal/cinikkuttu/function-junction-2

விஜய்சேதுபதி ரத்ததானம்!

vijaysethupathi

Advertisment

ஸ்டன்ட் யூனியனின் 51-ஆவது ஆண்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்ததானம், கண் தானம் செய்தனர்.

தயாரிப்பாளர் கலைப்புலிஎஸ். தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

Advertisment

இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் பேசும்போது, ""ரத்ததான,ம் கண் தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைப்பிடியுங்கள்'' என்று அறிவுரை கூறினார்.

கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜ

விஜய்சேதுபதி ரத்ததானம்!

vijaysethupathi

Advertisment

ஸ்டன்ட் யூனியனின் 51-ஆவது ஆண்டு விழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் ஸ்டன்ட் கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஏராளமான உறுப்பினர்கள் ரத்ததானம், கண் தானம் செய்தனர்.

தயாரிப்பாளர் கலைப்புலிஎஸ். தாணு ஸ்டன்ட் யூனியனுக்கு ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.

Advertisment

இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் பேசும்போது, ""ரத்ததான,ம் கண் தானம் செய்யும் உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஸ்டன்ட் காட்சிகளில் கொஞ்சம் நிதானத்தையும் கடைப்பிடியுங்கள்'' என்று அறிவுரை கூறினார்.

கண் மருத்துவரும் மறைந்த நடிகர் ஜெய்சங்கரின் மகனுமான டாக்டர் விஜய்சங்கர் இலவச கண் சிகிச்சையை உறுபினர்கள் அனைவருக்கும் அளித்தார்.

நடிகர் விஜய்சேதுபதி ரத்ததானம் வழங்கிப் பேசும்போது, ""படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காக தினம் தினம் எவ்வளவோ ரத்தத்தை நீங்கள் இழந்துகொண்டு இருக்கிறீர்கள். உங்கள் விழாவில் நான் கலந்துகொண்டு ரத்ததானம் செய்ததை உங்களுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக நினைக்கிறன். இது மாதிரி ஒவ்வொரு வருடமும் ரத்ததானம், கண்தானம் செய்து மற்றவர்களையும் இதுபோல் செய்யும்படி வலியுறுத்துங்கள்'' என்றார்.

விழாவில் ஸ்டன்ட் யூனியனின் மூத்த உறுப்பினர்கள் 6 பேர் கௌரவிக்கப்பட்டனர். யூனியனின் செயல்பாடுகளுக்காக WWW.SISDSAU.COM என்ற இணையதளமும் துவங்கப்பட்டது.

ஸ்டன்ட் யூனியன் தலைவர் சுப்ரீம் சுந்தர் வரவேற்புரை யாற்ற சூப்பர் சுப்பராயன் நன்றியுரையாற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை செயலாளர் எம். செல்வம், பொருளாளர் சி.பி. ஜான் ஆகியோர் செய்திருந்தனர்.

தெம்மாங்கு பாடகர்களுக்காக...

function-junction

சிறந்த பின்னணி இசைக்காக கேரள அரசின் விருதுபெற்ற இசையமைப்பாளர் தஷி, திரைப்படங்ளுக்கு இசையமைப்பதுடன், பக்தி இசை ஆல்பங்கள் உள்ளிட்ட தனி இசை ஆல்பங்கள் பலவற்றை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், தெம்மாங்கு பாடகர்களுக்காக புதிய இசை ஆல்பம் ஒன்றை அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.

"சின்ன சின்ன வண்ணக்கிளி' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த இசை ஆல்பத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள் உள்ளன. இந்த ஒன்பது பாடல்களையும் எழுதி பாடியிருப்பவர் நாட்டுப்புற பாடகர் தெம்மாங்கு ரமேஷ். இவருடன் மற்றொரு தெம்மாங்கு பாடகியான மஞ்சக்குடி ஜெயலட்சுமியும் பாடியுள்ளார்.

இசைக் கச்சேரிகளில் நாட்டுப்புற பாடல்களைப் பாடிவந்த தெம்மாங்கு ரமேஷ் மற்றும் மஞ்சக்குடி ஜெயலட்சுமி ஆகியோரை, திருவாரூரில் நடைபெற்ற இசைக்கச்சேரி ஒன்றில் பார்த்த இசையமைப்பாளர் தஷி, அவர்களது குரல் வளத்தைப் பார்த்து அவர்களை "ஆடவர்' என்ற திரைப்படத்தில் பாடவைத்து தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக அறிமுகப்படுத்தினார்.

"சின்ன சின்ன வண்ணக்கிளி' இசை ஆல்பத்தை நடிகர் ஜெய் ஆகாஷ் வெளியிட, திரைப்பட தயாரிப்பாளர் பி.கே. சந்திரன் பெற்றுக் கொண்டார்.

பாலுமகேந்திரா நூலகம் துவக்க விழா

sathayaraj

சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ மன்றத்தில் பாலுமகேந்திரா நூலகம் நடிகர் சத்யராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், ராம், சுப்ரமணிய சிவா, மீரா கதிரவன், நடிகை ரோகிணி, எழுத்தாளர் பாமரன் ஆகியோரால் துவக்கப்படது .

உதவி இயக்குனர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சென்னை சாலிக்கிராமம் எண் 1, திலகர் தெருவில் இயக்குனர் எழுத்தாளர் அஜயன்பாலா இந்த பாலுமகேந்திரா நூலகத்தை த்துவக்கியிருக்கிறார்.

எழுத்தாளர் பாமரன் தன் வழக்கமான நகைச்சுவை உணர்வுடன், ""நானும் ஆரம்பத்தில் நூலகம் துவக்கினேன். ஒருவரும் வரவில்லை, பிற்பாடு அது டாஸ்மாக் ஆனபோது கூட்டம் முண்டியடித்தது. இந்த நிலை பாலுமகேந்திரா நூலகத்துக்கு வரவிடாமல் பாதுகாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை'' என்றார்.

ஃபர்ஸ்ட் ஃபங்ஷன்

first-function

சினிமா ஸ்டிரைக் முடிந்தபின் முதல் திரைப்பட விழாவாக "சந்திரமௌலி' ஆடியோ ரீலீஸ் விழா வருகிற 25-ஆம் தேதி சென்னை சத்யம் தியேட்டரில் நடக்கவுள்ளது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் நடிகர் விஷால் கலந்துகொள்கிறார்.

உதவி

vikram

ஏப்ரல் 17 "சீயான்' விக்ரமின் 53-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, விக்ரம் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Sathayaraj
இதையும் படியுங்கள்
Subscribe