Advertisment

ஃபங்ஷன்- ஜங்ஷன்24

/idhalgal/cinikkuttu/function-junction-1

அரங்கேற்றம்

function-junction

Advertisment

பிரபல தொழிலதிபர் ஜி. வினோத்குமார்- அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின் (வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ்ப் பேரவை டி .என். ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகுவிமர்சையாக நடந்தது. குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி. ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி. ரோஷினி கணேஷ் ஏழுவிதமான பாடல்களைப் பாடினார். மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க

அரங்கேற்றம்

function-junction

Advertisment

பிரபல தொழிலதிபர் ஜி. வினோத்குமார்- அனந்தநாயகி தம்பதியரின் மகள் குமாரி மதுமிதாவின் (வயது 13) பரத நாட்டிய அரங்கேற்றம் சென்னை முத்தமிழ்ப் பேரவை டி .என். ராஜரத்தினம் கலையரங்கில் சமீபத்தில் வெகுவிமர்சையாக நடந்தது. குமாரி மதுமிதாவின் நாட்டிய குரு திருமதி. ஸ்ரீமதி வெங்கட் தலைமையில் திருமதி. ரோஷினி கணேஷ் ஏழுவிதமான பாடல்களைப் பாடினார். மதுமிதாவின் நாட்டியம் ஒவ்வொன்றும் ரசிகர்களை மெய்மறக்க வைத்தது. சிறப்பு விருந்தினர்களாக பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், நடிகை சுலக்ஷனா, நட்டுவாங்க வித்வான் குத்தலாம் செல்வம், கீழ்க்கட்டளை ரவீந்திரபாரதி, பள்ளி நிர்வாகி திருமதி. ஹேமலதா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

நடிகை சுலக்ஷனா பேசுகையில்.... ""சிறுவயதில் நானும் நாட்டியம் கற்றுக்கொண்டேன். மதுமிதா மேடையில் ஆடும்போது தானாக எனது கால்கள் தாளம் போட்டு ஆடத்துவங்கின. நாட்டியத்தில் பாவங்கள் மிகவும் முக்கியம். அது மதுமிதாவிடம் அபாரமாக இருந்தது. மதுமிதாவிற்கும்... மதுமிதாவைப்போல் நாட்டியம் ஆடும் பெண்களுக்கும் என் வேண்டுகோள். தினமும் ஒரு மணி நேரம் நாட்டியப் பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.

திருமணத்திற்குப்பிறகு பலர் சில நிர்பந்தத்தினால் நாட்டியத்தை விட்டுவிடுகிறார்கள். தயவுசெய்து திருமணமானபிறகு நாட்டியத்தைக் கைவிட்டு விடாதீர்கள். நம் பாரம்பரியக்கலையான பரதக்கலைக்கு சேவை செய்து கொண்டே இருங்கள்'' என்றார்.

அகாடமி

Advertisment

function-junction

வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான அஜெய்ரத்னம் விளையாட்டுத் துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

அவர் தற்போது அம்பத்தூர் அருகே அயப்பாக்கம் எனும் இடத்தில் "வி ஸ்கொயர்' என்ற பேட்மிடன் அகாடமியைத் தொடங்கி இருக்கிறார்.

நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அகாடமியைத் திறந்துவைத்தார். விழாவில் அஜெய்ரத்னம் மற்றும் அவரது மகன்களான தீரஜ் விஷ்ணு ரத்னம், விஷ்வேஷ் ரத்னம் ஆகியோரும் பங்குபெற்றனர்.

நூல் வெளியீடு!

function-junction

ஏ.வி.எம். சரவணன், தினந்தந்தியில் "நானும் சினிமாவும்' என்ற தலைப்பில் தொடர் எழுதினார். அத்தொடரை தொகுத்து தினத்தந்தி பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. இந்த நூலை ஏ.வி.எம். சரவணன் திரைத்துறைக்கு வந்து 60-ஆம் ஆண்டில் நடிகர் சிவகுமார் வெளியிட, பத்மஸ்ரீ டாக்டர் நல்லி குப்புசாமி செட்டி பெற்றுக்கொண்டார். வெளியீட்டு விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி, டைரக்டர் எஸ்.பி. முத்துராமன், டைட்டன் ரகு, பத்திரிகையாளர் நடராஜன், டாக்டர் மயிலப்பன், ராஜா வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இவர்களுடன் ஏ.வி.எம். சரவணன் குடும்பத்தார் திருமதி. லட்சுமி சரவணன், நித்யா குகன், உஷா சரவணன், சித்தார்த், ஹரினி சித்தார்த் ஆகியோரும் ஏ.வி.எம் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் பங்குபெற்றார்கள். விழாவிற்கு வந்திருந்தவர்களை எம்.எஸ். குகன், அருணா குகன், அபர்ணா குகன், பி.ஆர்.ஓ பெருதுளசி பழனிவேல் ஆகியோர் வரவேற்றார்கள்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe