விவசாயம் பற்றியும், விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றியும், விவசாயம் நலிவடைந்திருப்பதன் பின்னுள்ள வணிக அரசியல் பற்றியும் பேசும்படம் "வாழ்க விவசாயி'.

அப்புகுட்டி நாயகனாக வும் வசுந்தரா நாயகியாகவும் நடித்துள்ளனர். "வழக்கு எண்' முத்துராமன், "ஹலோ' கந்தசாமி உள்ளிட்ட குணச்சித்திர நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். பி.எல்.பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் "பால்டிப்போ' கே. கதிரேசன் தயாரித்துள்ளார்.

ee

இப்படத்தைப் பொங்கலுக்கு வெளியிடு வதாக இருந்த படக்குழுவினர், ரஜினி நடித்த "தர்பார்' பொங்கலுக்கு முன்பே வெளியானதால் சற்று இடைவெளிவிட்டு பிப்ரவரிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

Advertisment

படம் தாமதமானது குறித்து நடிகர் அப்புக்குட்டி பேசும்போது, ""இப்போது எட்டுப் படங்களில் நடித்து வருகிறேன். "வல்லவனுக்கு வல்லவன்', "பூம் பூம் காளை', "வைரி', "ரூட்டு', "மாயநதி', "இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு', "பரமகுரு', "கல்தா' போன்ற படங்கள் கைவசம் உள்ளன. எனக்கு வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

எனக்கு எந்த வருத்தமும் இல்லை; மகிழ்ச்சியாகவே இருக்கிறேன். நான் நடித்த "வாழ்க விவசாயி', "குஸ்கா' படங்கள் வெளிவரத்தயாராக இருக்கின்றன. இதில் "வாழ்க விவசாயி' படம் எனக்கு ஸ்பெஷலான படம்.

தை மாதம் பொங்கல் காலம் என்பது விவசாயிகளின் அறுவடைக் காலம். விவசாயம் முடிந்து அறுவடை செய்யும் அந்தக் காலக்கட்டத்தில், விவசாயிகள் பற்றிய படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தில் பொங்கலுக்காகத் திட்டமிடப்பட்டது. ஆனால் "தர்பார்' போன்ற பிரம்மாண்ட, வணிகரீதியான படங்களின் வெளியீட்டின்போது வெளியிட்டால் வெற்றி பாதிப்பது மட்டுமல்லாமல், இம்முயற்சி கவனம் பெறாமல் போய்விடும் என்பதால் சற்றுத் தள்ளி வைத்துள்ளனர்.

Advertisment

நம் படம் சரியான நேரத்தில் வரவேண்டும். இல்லையேல் சரியான விதத்தில் மக்களைச் சென்றடைய வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கை ஒரு போராட்டமாக இருப்பதுபோல இந்தப் படத்தின் வெளியீடும் ஒரு சவாலாகத்தான் இருக்கும் போலிருக்கிறது'' என்றார்.

-----------------------------------------------------------

ddcசினிமாவில் நல்லா வந்துக் கிட்டிருந்த ஜீவன் திடீர்னு காணாமல் போனார். இருக்காரா? இல்லையா? மர்மமாகவே இருந்துச்சு. இப்ப திடீர்னு என்ட்ரியாகியிருக்கார்.

"6.2', "ஓரம்போ', "வாத்தியார்' போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்த வி. பழனி வேல் தனது வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரம்மாண்ட மான முறையில் தயாரிக்கும் படம் "பாம்பாட்டம்'.

ஜீவன் இந்தப் படத்தில் கதாநாயக னாக நடிக்கிறார்.

இதுதான் இவர் நடிக்கும் முதல் "ஹாரர்' படம். வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த த்ரில்லர் கதையை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்ட மான பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குகிறார்.