"மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தானாக முன்வந்து, அவரின் நீண்டநாள் நண்பரும், மேனேஜருமான அன்பழகனைத் தயாரிப்பாள ராக்கி ஒயிட் லைன் புரொடக்ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க வைத்து, அந்த நிறுவனத்தை தன் கரங்களால் திறந்து வைத்துள்ளார்.

Advertisment

vijaysethpathi

ஒயிட் லைன் புரொடக்ஷனின் முதல் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் மற்றும் சூரி நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் அருண் சந்திரன். இவர் இயக்குநர் பொன்ராமிடம் "வருத்தப்படாத வாலிபர்' சங்கம், "ரஜினி முருகன்' படங்களில் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.