2000-ஆம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக் கில் படித்தவர் கண்ணன். இவருடன் படித்த நண்பர் களில் 90 சதவிகிதம் பேர் இந்தியாவிலும், வெளிநாடு களிலும் பெரிய நிறுவனங் களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள். காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம். செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத் தனியாகப் படம் இயக்கத் தயாரிப்பாளர்களின் அலுவலகப்படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார் கண்ணன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/friend.jpg)
இதையறிந்த அவரது வகுப்புத் தோழர்களில் இருவர் மற்றவர்களை ஒவ்வொரு வராகத் தொடர்புகொள்ளத் துவங்கி செய்தியைப் பரிமாற ஆரம்பித்தார்கள். உடனே வாட்ஸ் அப்பில் ஒரு குழு உருவாக்கி 50 மாணவர்களும் தங்கள் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கண்ணன் இயக்கும் படத்துக்கு முதலீடு செய்வதாக உறுதியளித் தார்கள். இது கதையல்ல நிஜம்.
உறுதிமொழியில் இருந்து கடந்த ஒரு வருடத்தில் ஒருவர்கூட பின்வாங்காத நிலையில், சினிமாவில் வழக்கமாக சந்திக்கும் சில சங்கடங்களைக் கடந்து "நெடுநல் வாடை' வரும் மார்ச்சில் திரைக்கு வருகிறது.
படத்தின் கதை குறித்துப் பேசிய இயக்குநர் செல்வ கண்ணன், ""மகன்வழிப் பேரன், பேத்திகளுக்குக் கிடைக்கும் சொத்துரிமை, அங்கீகாரம் சமூகத்தில் மகள்வழி உறவுகளுக்குக் கிடைப்பதில்லை. குறிப்பாக ஈமக்கடன்களில் கூட அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறேன்.
இன்னொரு பக்கம் காதல் தோல்விகளில் எப்போதும் பெண்கள் மட்டுமே குற்றவாளி கள்போல், துரோகம் இழைத்த வர்கள்போல் சித்தரிக்கப்படுகி றார்கள். அவர்கள் தரப்பில் இருக்கும் யதார்த்ததையும், நியாயத்தையும் பேசி இருக்கிறேன்'' என்கிறார்.
முக்கிய கதாபாத்திரங்களில் "பூ' ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் நடித்திருக்கி றார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01/friend-t.jpg)