Advertisment

"சரக்கு' ஸ்டாப்... ஸ்டார்ட்...

/idhalgal/cinikkuttu/freight-stop-start

ரசியலில் எதிரும் புதிருமா இருக்கும் இரண்டு பிரபலங்களின் "டார்க் லைஃப்' வெளிச்சத்துக்கு வந்தது. அதை அடிப்படையாக வைத்து ’"சிவா மனசுல புஷ்பா' என்ற படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணினார் வாராகி. சென்சார் பிரச்சினை, கோர்ட்டில் வழக்கு என அந்தப் படம் பாடாய்படுவதால், தனது அடுத்த பட வேலையை ஆரம்பித்தார் வாராகி.

Advertisment

nameetha

15 வருடங் களுக்கு முன்பு சரத்குமாரை

ரசியலில் எதிரும் புதிருமா இருக்கும் இரண்டு பிரபலங்களின் "டார்க் லைஃப்' வெளிச்சத்துக்கு வந்தது. அதை அடிப்படையாக வைத்து ’"சிவா மனசுல புஷ்பா' என்ற படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணினார் வாராகி. சென்சார் பிரச்சினை, கோர்ட்டில் வழக்கு என அந்தப் படம் பாடாய்படுவதால், தனது அடுத்த பட வேலையை ஆரம்பித்தார் வாராகி.

Advertisment

nameetha

15 வருடங் களுக்கு முன்பு சரத்குமாரை வைத்து "சத்ரபதி' என்ற படத்தை டைரக்ட் பண்ணியவர் ஸ்ரீமகேஷ்.

அதன்பின் தமிழில் பட வாய்ப்புகள் கிடைக்காததால், தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

Advertisment

அங்கும் கிடைக்காததல் சதா நேரமும் சரக்கு அடிக்க ஆரம்பித்தார் மகேஷ். இதைக் கேள்விப்பட்ட வாராகி, மகேஷை அழைத்து வந்து, தனது சொந்த பாதுகாப்பில் சில மாதங்கள் வைத்திருந்து புத்துணர்ச்சி ஊட்டி, டைரக்ட் பண்ணும் அளவுக்கு மகேஷை தயார்படுத்தினார்.

திருமணத்திற்குப்பின் நமீதா நடிக்கும் முதல் படம் என்ற பப்ளிசிட்டியோடு, "அகம்பாவம்' படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார் வாராகி. இந்தப் படம் முடியும்வரை குடிக்ககூடாது என மகேஷிடம் உறுதிமொழி வாங்கியபின்தான் ஷூட்டிங்கை

nameetha

ஆரம்பித்தார் வாராகி. சமூக அவலத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் பெண் பத்திரிகையாளராக நமீதாவும் சாதி அரசியல் பண்ணுபவராக தயாரிப்பாளர் வாராகியும் இன்னொரு சாதித் தலைவராக வக்கீல் விஜயகுமார் மற்றும் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து

ஆகியோர் நடிக்க பத்து நாட்கள் படப்பிடிப்பு படு விறுவிறுப்பாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் டைரக்டர் மகேஷோ, தனது பழைய ஸ்டைலுக்கு மாறினார். தினமும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சரக்கு அடித்துவிட்டு வர ஆரம்பித்தார். ஷூட்டிங் ஸ்டாப் பானது. இதனால் நமீதா உட்பட அனைவரும் டென்ஷனாகினர். பார்த்தார் வாராகி, இது வேலைக்கு ஆகாது என முடிவெடுத்து, தானே டைரக் ஷன் பண்ணும் வேலையில் இறங்கிவிட்டார். ""டைரக்ஷனுக்கு மகேஷ் சரிப்பட்டு வர மாட்டார்னு என்னோட நண்பர் கள் சொன்னதையும் மீறி அவரை டைரக்டராக்குனேன்.

இப்ப உஷாராகி நானே களத்தில் இறங்கிட்டேன். இனிமே எல்லாமே சுமுகமாகவும் சூப்பராவும் இருக்கும்ணே'' என்றார் வாராகி.

cine120219
இதையும் படியுங்கள்
Subscribe