ஜே.சி.எஸ். மூவீஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் "மோசடி.'.
இந்தப் படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், என்.சி.பி. விஜயன், வெங்கடாசலம், நீலு சுகுமாரன், ஓ.எஸ். சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fraud_1.jpg)
ஒளிப்பதிவு- ஆர். மணிகண்டன், இசை- ஷாஜகான், பாடல்கள்- மணிஅமுதவன், கே. ஜெகதீசன், எடிட்டிங்- எஸ்.எம்.பி. சுப்பு, கோபி ரா. நாத், நடனம்- விமல், பாலா, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே. ஜெகதீசன் ""2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது.
அதைத் தொடர்ந்து, பெரும்புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பைப் பயன்படுத்தி எப்படி குறுக்குவழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை க்ரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன்'' என்கிறார் இயக்குநர் கே. ஜெகதீசன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-06/fraud-t.jpg)