மிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். "சுட்டிக் குழந்தை', "கோபாலா கோபாலா', "பொற்காலம்', "பூந்தோட்டம்', "வாஞ்சிநாதன்' உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்தவர்.

Advertisment

அதேபோல், தமிழில் பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கில் ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்தவர் ஆம்னி. காஜா மைதீனைத் திருமணம்செய்த பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஆம்னி மீண்டும் தெலுங்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisment

omini

தற்போது ஆம்னியின் தம்பி சீனிவாஸ் மகள் ஹிரித்திகா நடிகை யாக அறிமுகமாகிறார். கருப்பையா முருகன் இயக்கத்தில் அசோக் நடிக்கும் "விடியாத இரவொன்று வேண்டும்' என்ற படத்தில் கதாநாயகி யாக அறிமுகமாகிறார்.

புதுவரவான ஹிரித்திகா என்ன சொல்றாருன்னா...

""எனது அத்தை ஆம்னிக்கு தெலுங்கில் மிகப்பெரிய செல்வாக்கு. அவர் ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவரைப் பார்த்து வளர்ந்த எனக்கும் அவரைப்போலவே நடித்து பேர் வாங்கவேண்டும் என்று சின்ன வயதிலிருந்தே ஆசை. அதேமாதிரி மாமா காஜா மைதீனும் ஏராளமான படங்களை எடுத்து பேர் பெற்றவர்.

Advertisment

இருவரும் பள்ளிப் படிப்பை முடி. அதற்குப்பிறகு நடிக்கலாம் என்று வாழ்த்தினர்.

பிறகு முறைப்படி பரத நாட்டியம் மற்றும் சினிமாவுக்குண்டான டான்ஸ் எல்லாம் கத்துக் கிட்டேன். பூர்வீகம் ஆந்திரா. வளர்ந்தது தமிழ்நாடு. இப்போ காலேஜ் படிச்சிட்டு இருப்பது பெங்களூருவில். அசோக் நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்ததும் ஒத்துக்கிட்டேன். படம் முடிவடைந்துவிட்டது. இனி நிறைய படங்களில் நடிக்கவேண்டுமென்று முடிவெடுத்திருக்கி றேன். என் அத்தையைவிட நிறைய படங்களில் நடிக்கணும். அவரைவிட அதிகமான விருதுகளைப் பெற்று அவர்களிடம் அதை காணிக்கையாக்க வேண்டும். அதுதான் என் ஆசை'' என்கிறார் ஹிரித்திகா.